fbpx

அந்த மனசு யாருக்கு வரும்.? யாராலயும் செய்ய முடியாத இரண்டு விஷயங்களை செய்து காட்டிய கேப்டன் விஜயகாந்த்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் இன்று உடல் நலக்குறைவாழ் இயற்கையை எய்தினார். சினிமாவில் மட்டுமல்லாது பொதுவாழ்விலும் மக்களுக்கு பல்வேறு வகையான நன்மைகளை செய்து வந்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களுக்கு அவர் பல்வேறு நன்மையான காரியங்களை செய்திருந்தாலும் அவர் செய்த இரண்டு விஷயங்கள் என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவையாக இருக்கின்றன.

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் ஏழை எளிய மக்களுக்கு தான தர்மங்களை வழங்குவது உணவு வழங்குவது போன்ற பல சேவைகளை செய்து வந்தாலும் கல்வியிலும் அவர் முக்கிய பங்காற்றி இருக்கிறார். இவர் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி என்ற கல்லூரியை காஞ்சிபுரத்தில் நிறுவினார். மேலும் இந்த கல்லூரியில் மாணவர்களுக்கான அனைத்து இடங்களையும் அரசாங்க கோட்டாவிற்கே ஒதுக்கினார் என்பது தான் முக்கியமானது. மேனேஜ்மென்ட் கோட்டா என்று எதுவும் வைக்காமல் மாணவர் சேர்க்கைக்கான அனைத்து இடங்களையும் அரசாங்கத்தின் பொறுப்பிலேயே விட்டுவிட்டார். இதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு கல்வி குறைந்த செலவில் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு செய்தார் .

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்திலும் இவர் செய்த உதவிகளை யாரும் மறக்க மாட்டார்கள். மத்திய மாநில அரசுகளின் கொரோனா நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவை தெரிவித்த விஜயகாந்த் தனது கல்லூரி மற்றும் தேமுதிக கட்சியின் அலுவலகத்தை கொரோனா சிகிச்சைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்தார் மேலும் தனது தொண்டர்களுக்கும் கட்டளை இட்ட அவர் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்க உத்தரவிட்டார் .

மேலும் கொரோனா பொது அடக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தின கூலிகளுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி தேமுதிக தொண்டர்களுக்கு கட்டளையிட்ட அவர் அவர்களின் வாழ்வாதாரங்களுக்கான மாற்று ஏற்பாடுகளை செய்யும்படியும் தனது தொண்டர்களையும் கட்சி நிர்வாகிகளையும் கேட்டுக் கொண்டார். எப்போதும் பொது மக்களுக்கு ஏதேனும் துயர் ஏற்பட்டால் அதனை துடைப்பதற்கு முதலில் கரம் நீட்டியவர் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

விஜயகாந்தின் ஆசை..!! மகன்களின் திருமணத்தை பார்க்காமலேயே மறைந்துவிட்டார்..!!

Thu Dec 28 , 2023
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமானோர் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கேப்டன் விஜயகாந்துக்கு பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இருவரும் 30 வயதை கடந்துவிட்ட நிலையில், இன்னும் திருமணம் நடைபெறவில்லை. மூத்த […]

You May Like