தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கேசவன் ராஜ் என்ற லாரி ஓட்டுநர் தூத்துக்குடியில் இருந்து பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற போது இன்று அதிகாலையில் பல்லடத்தில் தாராபுரம் பிரிவில் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது லாரிக்கு எதிரே கோவையில் இருந்து வந்த கோவையைச் சேர்ந்த பரணிதரன் மற்றும் அபிஷேக் குமார் ஆகிய இருவரும் லாரியை உரசுவது போல காரை இயக்கியுள்ளனர். சுதாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர் கேஷ்வன்ராஜ் லாரியை லாவகமாக திரும்பியதால் பெரும் விபத்து காரில் வந்த இரண்டு இளைஞர்களும் லாரி ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். திடீரென காரில் இருந்த துப்பாக்கியை காட்டி கேசோன்ராஜை மிரட்டி உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து லாரி ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் பல்லடம் வல்துறையினர் இரண்டு இளைஞர்களையும் தாராபுரத்தில் மடக்கிப் பிடித்துள்ளனர்.இருவரையும் பல்லடம் காவல் நிலையம் அழைத்துச் வந்து விசாரணை மேற்கொண்டனர். கோவையைச் சேர்ந்த பரணிதரன் மற்றும் அபிஷேக்குமார் ஆகிய இருவரும் லூரியில் படித்து வருவதாகவும் அவர்கள் வைத்திருந்தது (ஏர்பிஸ்டல்) பொம்மை துப்பாக்கி என்பது தெரிய வந்துள்ளது.இதுகுறித்து பல்லடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இருவர் மீதும் தகாத வார்த்தையால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல், வழிமறித்தல் போன்ற மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.