fbpx

நாட்டின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்பு.. குவியும் வாழ்த்துக்கள்..!

உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்கிறார். நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக உதய்  உமேஷ் லலித் இன்று பதவியேற்கிறார். டெல்லியில் இருக்கும் குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தலைமை நீதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்த என்.வி ரமணா .நேற்றுடன் ஓய்வு பெற்றார். இந்நிலையில், அவருக்கு அடுத்தபடியாக மிக மூத்த நீதிபதியாக இருந்து வந்த யு.யு.லலித் சுப்ரீம் கோர்ட்டின் 49 ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வந்த இவர் 2014 -ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார் . இவரது தந்தை யு.ஆர். லலித் டெல்லி உயர் ஐகோர்ட் நீதிபதியாக பதவி வகித்தவர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த இவர் 1983-ல் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். 1985 வரை மும்பை ஐகோர்ட்டில் பணியாற்றி வந்த இவர் , 1986 -ஆம் வருடம் டெல்லிக்கு இடம் பெயர்ந்தார்.  2004- ஆம் வருடம் மூத்த வழக்கறிஞராக சுப்ரீம் கோர்ட்டில் அறிவிக்கப்பட்ட இவர் பத்து வருடங்களுக்கு பிறகு நீதிபதியானார். தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள இவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Baskar

Next Post

இந்த அறிகுறிகள் இருந்தால்.. உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம்..

Sat Aug 27 , 2022
கடந்த சில மாதங்களாக ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படுவது என்பது இயல்பாகி வருகிறது.. ஹேக் செய்வதன் மூலம் நமது ஸ்மார்ட் போனில் இருக்கும் ஒரு சில செயலிகள், நிதி தொடர்பான தகவல்களைத் திருட முயற்சிக்கக்கூடும் என்று சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.. எனவே உங்கள் போனில் இந்த அறிகுறிகள் இருந்தால், உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.. பேட்டரி வேகமாக குறைந்தால் : உங்கள் தொலைபேசியின் பேட்டரி வழக்கத்தை […]
SOVA

You May Like