fbpx

வருங்காலத்தில் தலைவர் ஆகும் தகுதி உதயநிதிக்கு இருக்கிறது – துரைமுருகன் பேச்சு…

நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது. சென்னையில் சமீபத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவரது தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது.

திமுக சார்பில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்து விடுவோம் என்கின்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அதற்கான முன்னெடுப்புகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பலனும் இல்லை. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை திமுக நடத்தி வருகிறது.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தின் துவக்கத்தில் பேசிய துரைமுருகன், உதயநிதி இது தொடர்பாக தொடர் போராட்டங்களை தொடர்ந்து அறிவிப்பார்கள் என்று நம்புகிறேன் என்றும், அவருடைய காலத்தில் நீட் தேர்வு ஒழிந்தது, அதற்கு காரணம் உதயநிதி என்று இருக்கும் அதற்கான ஆற்றலை கொண்ட உதயநித்திக்கு என்னுடைய வாழ்த்துக்கள். கலைஞர் கருணாநிதியுடைய வேகம் உதயநிதிக்கு இருக்கிறது, தளபதி ஸ்டாலினின் திட்டமிடலும் உதயநிதியிடம் இருக்கிறது. நான் மூண்று தலைமுறைகளை பார்த்தவன் அந்த வகையிலையே தான் இந்த மாபெரும் கூட்டத்தை அவரால் தான் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

Kathir

Next Post

பெற்றோர்களே கவனம்!… உங்க குழந்தைகளுக்கு இந்த பாதிப்புகள் இருக்கா?… வளர்ந்த பிறகும் சரிசெய்ய முடியாது!

Sun Aug 20 , 2023
உணர்ச்சிகளின் ஆரம்பகட்ட வளர்ச்சியை நம்முடைய குழந்தைப்பருவம் தான் பிரதிபலிக்கிறது. இந்தக் காலகட்டத்தில் நமக்கு ஏற்படக்கூடிய மனக் காயங்கள், காலம் முழுவதும் நம் கூடவே இருக்கும். இப்படி குழந்தைப்பருவத்தின் தீர்க்கப்படாத உள் மன காயங்கள், நாம் பெரியவர்கள் ஆனதும் நம்முடைய உறவில் வெளிப்படும் போது, நமது நடத்தையிலும், உணர்ச்சியிலும், அடுத்தவர்களோடு உரையாடுவதிலும் மிகப்பெரிய செல்வாக்கை செலுத்துகிறது. நம்முடைய வாழ்க்கையை ஆரோக்கியமாகவும் நிறைவாகவும் வாழ வேண்டுமென்றால், இந்தக் காயங்களை ஆற்றுப்படுத்துவது மிகவும் முக்கியம் […]

You May Like