fbpx

“வர்றாரு சின்னவரு..” துணை முதல்வராகிறார் உதயநிதி.! குஷியில் உடன்பிறப்புகள்.!

திமுக அரசில் விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலத்துறை அமைச்சராக இருப்பவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் விரைவில் தமிழகத்தின் துணை முதல்வராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கான அறிவிப்பு திமுகவின் இளைஞரணி மாநாட்டில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பேரனும் முதல்வர் மு க ஸ்டாலின் மகனுமாகிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 21 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் தொகுதி வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவரது உழைப்பு மற்றும் பிரச்சாரம் அனைவராலும் மிகவும் பாராட்டப்பட்டது. மேலும் தனது தொகுதியின் வளர்ச்சிக்காக சிறப்பாக பாடுபட்டதை தொடர்ந்து அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக களப்பணி ஆற்றவும் அதற்கான வேலைகளை திறம்படச் செய்யவும் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . இதற்கான அறிவிப்பு இரண்டாவது திமுக இளைஞரணி மாநாட்டிற்கு பிறகு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது .

Next Post

நடுவானில் திடீரென கழன்று விழுந்த கதவு..!! அலறிய பயணிகள்..!! நடந்தது என்ன..? அதிர்ச்சி தகவல்..!!

Sat Jan 6 , 2024
சமீபகாலமாக விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர, சில அநாகரிகச் செயல்களும் பயணிகளை பதைபதைப்புக்கு உள்ளாக்குகின்றன. மற்றொரு பக்கம் சில நேரம், பயணிகள் சிலர் முன்னெச்சரிக்கையின்றி அவசரகால வழிக்கான கதவுகளைத் திறக்கும் செயல்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் கதவு பெயர்ந்து விழுந்ததில் பயணிகள் அச்சம் அடைந்தனர். அமெரிக்காவின் போர்ட்லேண்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் […]

You May Like