சமீபத்தில் ரஷ்யா விடுவித்த உக்ரைன் நாட்டின் ராணுவ வீரரின் புகைப்படம் பிடிபடும் முன் மற்றும் பின் என குறிப்பிட்டு வெளியிடப்பட்ட போட்டோ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் வீரர் ஒருவரை சமீபத்தில் ரஷ்யா சிறைப்பிடித்து வைத்தது. இதில் மைக்கேலோ டியானோவ் என்ற வீரரை சமீபத்தில் ரஷ்யா விடுவித்தது. அவரை மீட்ட உக்ரைன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக அந்த வீரரை ரஷ்யா பிடித்துச் செல்லும் முன் மற்றும் தற்போது உள்ள நிலை குறித்த போட்டோவை வெளியிட்டு.. உக்ரைன் வீரர் மைக்கைலோ டியானோவ்வை ரஷ்யா சமீபத்தில் விடுவித்தது. இவர் அதிர்ஷ்டசாலி , தன் உயிரை எப்படியோ காப்பாற்றிக் கொண்டார். இருந்தாலும் ரஷ்யா நாசிசத்தில் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடானது. ரஷ்யா ஜெனிவா உடன்படிக்கையை இப்படித்தான் கடைப்பிடிக்கின்றது என குறிப்பிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த படத்தை பார்க்கும் நமக்கே அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
பல நாள் முறையான உணவு கொடுக்கப்படாமல் சித்ரவதை செய்ததை நம்மால் பார்க்க முடிகின்றது. இதை பார்த்தவர்கள் டுவிட்டரில் ’’இதயம் நொறுங்குவதுபோல் உள்ளது என கமணெ்ட் செய்து வருகின்றனர்.