fbpx

ஆஸ்கர் விழாவில் பேச அனுமதி கேட்ட உக்ரைன் அதிபர்.. தொடர்ந்து 2-வது முறை நிராகரிப்பு..

ஆஸ்கர் விழாவில் பேச வேண்டும் என்ற உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் கோரிக்கையை அகாடமி நிராகரித்தது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், வரும் 12-ம் தேதி 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போர் குறித்து உரையாற்ற உக்ரைன் அதிபர் ஜெலனஸ்கி திட்டமிட்டிருந்தார்.. ஆனால் ஆஸ்கர் விழாவில் பேச வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார்.. ஆனால் அவரின் கோரிக்கையை அகாடமி நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.. தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, ஜெலன்ஸ்கியை ஆஸ்கர் விருது குழு புறக்கணித்துள்ளது. எனினும் இதுகுறித்து ஆஸ்கர் விருதுகுழு கருத்து தெரிவிக்கவில்லை..

கடந்த ஓராண்டுக்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், பல விருது நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகளில் ஜெலென்ஸ்கி, வீடியோ கான்பிரன்ஸ் முறையில் தோன்றி உரையாற்றி வந்துள்ளார். இதன் மூலம் உக்ரைன் மீதான போர் குறித்து அவர் சர்வதேச கவனத்தை ஈர்த்து வந்துள்ளார்.. அந்த வகையில், கடந்த ஆண்டு நடைபெற்ற 64 வது கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார்.. அந்த வகையில், ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றி அவர் முயற்சித்து வந்த நிலையில், விருது குழு அவரின் கோரிக்கையை நிராகரித்துள்ளது..

இதற்கிடையில், ஜிம்மி கிம்மல் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. 2018-ம் ஆண்டு ஜிம்மி கிம்மல் கடைசியாக தொகுத்து வழங்கிய நிலையில், பல கடந்த 4 ஆண்டுகளாக தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டது..ட் கடந்த ஆண்டு, ரெஜினா ஹால், ஆமி ஷுமர் மற்றும் வாண்டா சைக்ஸ் மூவரும் தொகுத்து வழங்கினர்.

Maha

Next Post

வீட்டில் திடீரென்று பிடித்த குளிர்சாதன பெட்டி…..! காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் உடல் கருகி பலி….!

Fri Mar 10 , 2023
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தைச் சார்ந்த சபரீநாத் (40) என்பவர் சென்னையில் உள்ள அயனாவரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி கடந்த 2️ வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்ட நிலையில், தனியாக வசித்து வந்தார். நல்லூர் கிராமத்தில் உள்ள தடியர் சொந்த வீட்டில் கணவனை இழந்த பெண் தன்னுடைய மகனுடன் வசித்து வந்திருக்கிறார். சென்னையில் பணிபுரிந்து வரும் சபரிநாத் அவ்வப்போது விடுமுறை […]
ஏசியில் மின்கசிவு... திடீரென தீவிபத்து..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலி..!

You May Like