fbpx

ரஷ்ய போலீஸாரால் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பலரை ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் வைத்துள்ளனர். மேலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக குற்ற வழக்கு ஒன்றையும் ரஷ்யா பதிவு செய்துள்ளது.

உக்ரைனுக்கு எதிராக 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து, உக்ரைன் மக்கள் பலர் மற்றும் பிற ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கு எதிராக ரஷியா கைது வாரண்டுகளை பிறப்பித்து உள்ளது. இதன்படி, எஸ்தோனியா நாட்டு பிரதமர் காஜா கல்லாஸ், லித்துவேனியா நாட்டின் கலாசார மந்திரி மற்றும் லத்விய நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரை ரஷிய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் வைத்தனர். சோவியத் நாடாக இருந்த காலத்தில் இருந்த நினைவு சின்னங்களை அவர்கள் அழித்து விட்டனர் என கூறி இந்த பட்டியலில் அவர்கள் வைக்கப்பட்டனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் மீதும் கடந்த ஆண்டில் ரஷியா கைது வாரண்டுகளை பிறப்பித்தது. இந்நிலையில், ரஷ்யா உள்துறை அமைச்சரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ரஷ்யாவின் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. எனினும், இந்த தகவலை உக்ரைன் நிராகரித்து உள்ளது.

இதுபற்றி உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்ய சர்வாதிகாரி விளாடிமிர் புதினுக்கு எதிராக போர் குற்றங்களைப் புரிந்த சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படுவதற்கான வாரண்ட்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இது 123 நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

Next Post

காங். மாவட்ட தலைவர் மர்ம மரணத்தில் அதிரடி திருப்பம்.! 'போலீசாரிடம் சிக்கிய மரண வாக்குமூலம் கடிதம்..' மரணத்தின் பின்னணி என்ன?

Sun May 5 , 2024
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூரைச் சேர்ந்தவர் கே.பி.கே ஜெயக்குமார் தனசிங். தொழிலதிபரான இவர், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். கடந்த 2ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்ற ஜெயக்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேகமடைந்த ஜெயக்குமாரின் மகன், தந்தையை காணவில்லை என உவரி காவல் நிலையத்தில் […]

You May Like