உளுந்தூர்பேட்டை அருகே டிராவல்ஸ் பேருந்து மோதி சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு. காரில் சென்ற 2 பேர் உள்பட 45 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் சிப்காட் எதிரில் லாரி மீது அடுத்தடுத்து காரும் தனியார் டிராவல்ஸ் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் காரில் சென்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தனியார் டிராவல்ஸ் பேருந்தில் சென்ற 45-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை விபத்து
சென்னையில் ஓ.எம்.ஆர் சாலையில் மெட்ரோ பணிக்காக சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த விக்னேஷ் என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. உறவினரின் இறுதிச் சடங்கிற்காக சென்று வீடு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.