fbpx

கோடைக்கால நோய்களை தடுக்கும் குடைமிளகாய்!… எப்படி? என்னென்ன நன்மைகள் தெரியுமா?

கோடைகாலத்தில் குடைமிளகாயை சாப்பிட்டால், எளிதில் உடல் எடை குறையும். இதில் 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது மற்றும் எளிதில் ஜீரணமாகும்.

குடைமிளகாய் நாவுக்கு சுவையானது மட்டுமல்ல உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. கிமு 6000ஆம் ஆண்டிலிருந்து குடைமிளகாய் சமையலில் பயன்படுத்தப்பட்டதாக வரலாறு கூறுகின்றன. இதை கோடை காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இது உடல் எடையை குறைக்க உதவுகிறது, அதனுடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. குடைமிளகாயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, கரோட்டினாய்டுகள், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. குடைமிளகாயில் வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் உள்ளது. இது ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைக்க உதவுகிறது. இது இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. குடைமிளகாயில் எலக்ட்ரோலைட்டுகள், பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதை கோடையில் சாப்பிட்டால் உடல் நீரேற்றமாக இருக்கும். இதில் உள்ள வைட்டமின் சி சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

குடைமிளகாயை கோடை காலத்தில் சாப்பிடும் போது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். இது தெர்மோஜெனீசிஸை செயல்படுத்த உதவுகிறது. ஒருவரின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. இது இதய துடிப்பு, இரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. எடையைக் குறைக்கவும் உதவுகிறது. சிவப்பு குடைமிளகாயில் லைகோபீன் அதிகம் உள்ளது. எனவே இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பச்சை மிளகாயில் உள்ள நார்ச்சத்து உங்கள் கொழுப்பைக் குறைக்கிறது. உயர்த்தப்பட்ட ஹோமோசைஸ்டீன் அளவுகள் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கின்றன. குடைமிளகாயில் வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட்டுகள் உள்ளன. இது ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைக்க உதவுகிறது.

குடைமிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. தோல் பராமரிப்பு, மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க கொலாஜன் தேவைப்படுகிறது. இதை தயாரிக்க வைட்டமின் சி தேவைப்படுகிறது. இது கீல்வாதம் மற்றும் அழற்சியின் அபாயத்தைக் குறைக்கிறது. வைட்டமின் ‘கே’ இரத்தம் உறைவதற்கு உதவுகிறது. எலும்புகளை வலுவாக வைத்திருக்கவும், ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்கவும் இது அவசியம். சிவப்பு குடைமிளகாயில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் ‘ஏ’ கண்களை ஆரோக்கியமாக வைக்கிறது. இது லுடீன் கரோட்டினாய்டுகளின் வளமான மூலமாகும். இது கண்களின் மாஸ்குலர் சிதைவின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இது வயது தொடர்பான பிரச்சனை. குடைமிளகாயில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளது. இது கண்புரை நோயிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.

Kokila

Next Post

பணம் திருடியதை பார்த்துவிட்ட சிறுமி…..! இரக்கமின்றி படுகொலை செய்து அப்பாவி போல் நாடகமாடிய இளைஞர்…..!

Wed Jun 7 , 2023
டெல்லி அருகே உள்ள ஆக்ரா மாவட்டத்தில் திடீரென்று காணாமல் போன 9 வயது சிறுமி அவருடைய வீட்டில் இருக்கும் ஸ்டோர் ரூமில் உள்ள அலமாரியில் சடலமாக மீட்க பட்டு இருக்கிறார். 19 வயது இளைஞரிடம் இது குறித்து நடத்திய விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை டி.சி.பி விகாஸ் குமார் தெரிவித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் அந்த சிறுமியின் வீட்டில் பணத்தை திருடி உள்ளார். அதனை பார்த்து […]

You May Like