தேசிய பயிர்க்காப்பீடு இணையதளம் மூலம் இழப்பீடு தொகையை பெறும் DigiClaim எனப்படும் மின்னணு பணப்பரிமாற்ற முறையை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகம் செய்தார். இதன் மூலம் பிரதமரின் பசல் பீமா யோஜனா என்னும் பயிர்க்காப்பீடுத் திட்டத்திற்கான இழப்பீடுத்தொகையை மின்னணு பரிமாற்றத்தின் மூலம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த முடியும்.
இந்தத்திட்டத்தின் மூலம் 6 மாநிலங்களைச்சேர்ந்த விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகை மின்னணு முறையில் வழங்கப்படும். பயிர்க்காப்பீடு இழப்பீடு வழங்குவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு நிதி சார்ந்த ஆதரவு அளிக்கவும் இந்த மின்னணு பணப்பரிமாற்ற முறை பெரிதும் கைகொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது