fbpx

ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு அளிப்பதற்கான கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்…!

பிரதமரின் கதிசக்தி கட்டமைப்பு அமலாக்கத்திற்காக ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை நீண்டகால குத்தகைக்கு அளிப்பதற்கான கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமரின் கதிசக்தி கட்டமைப்பு அமலாக்கத்திற்காக ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை நீண்டகால குத்தகைக்கு அளிப்பதற்கான கொள்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும் அதன் மூலம் தொழில்துறையின் சரக்கு போக்குவரத்திற்கான செலவு குறையும். ரயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும்.

மின்சாரம், எரிவாயு, தண்ணீர் விநியோகம், தொலைதொடர்பு கேபிள், சாலை, மேம்பாலம் உள்ளிட்ட பொதுப்பணிகள், வளர்ச்சியடையும். இக்கொள்கையின் மூலம் 1.2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பிரதமரின் கதிசக்தி திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 300 சரக்கு போக்குவரத்து முனையங்கள் அமைக்கப்படும். நிலத்தின் சந்தை மதிப்பில், ஆண்டுக்கு 1.5 சதவீத வட்டியில், 35 ஆண்டுகள் வரை சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக ரயில்வே நிலங்கள் நீண்ட கால குத்தகைக்கு அளிக்கப்பட உள்ளது.

Vignesh

Next Post

14,500-க்கும் அதிகமான PM Shri பள்ளிகளை மேம்படுத்தும் திட்டம்...! மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உத்தரவு....!

Thu Sep 8 , 2022
மத்திய அரசு ஆதரவிலான PM Shri பள்ளிகள் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய திட்டம் தற்போது மத்திய மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் தெரிவு செய்யப்பட்ட பள்ளிகள் வலுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 14,500-க்கும் அதிகமான பள்ளிகளில் PM Shri பள்ளிகளாக மேம்படுத்தும். இந்த PM Shri பள்ளிகள், தேசிய கல்விக்கொள்கை 2020-ன் அனைத்து அம்சங்களையும் கொண்டதாகவும் மற்ற பள்ளிகளுக்கு முன்மாதிரியாகவும் […]
அரையாண்டு தேர்வு விடுமுறை..!! மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

You May Like