fbpx

அசத்தும் மத்திய அரசு…! மின்சார வாகனங்கள் தொடர்பான இணைய தள டிஜிட்டல் பலகை அறிமுகம்…!

மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங், மின்சார வாகனங்கள் தொடர்பான இணைய தள டிஜிட்டல் பலகையான evreadindia.org என்ற தளத்தை நேற்று தொடங்கி வைத்தார்.

கரியமிலவாயு வெளியேற்றத்தில் போக்குவரத்து 18 சதவீதம் பங்கு வகிப்பதாக அவர் கூறினார். இதைக் குறைக்க அரசு மின்சார வாகனங்களைத் தீவிரமாக ஊக்குவித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். இதுதான் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்கான நோக்கம் என அவர் தெரிவித்தார். மின்சார வாகனங்களைப் பற்றி பரவலாக பேசத் தொடங்குவதற்கு முன்பே, 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே மின்சார வாகனங்களில் மின்னேற்றம் செய்வதற்கான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரசு https://evyatra.beeindia.gov.in/ என்ற தகவல் பலகையை அறிமுகப்படுத்தியுள்ளது எனவும், இதில் மின்னேற்ற நிலையங்கள் தொடர்பான விரிவான தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

இணைய தளத்தின் நோக்கம்:

தொழில் துறை வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட இந்த தகவல் பலகை கட்டணமில்லா டிஜிட்டல் தளமாகும். இது தற்போதையை மின்சார வாகன பயன்பாடு, முன்னறிவிப்புகள், பேட்டரி தேவை, சார்ஜிங் நடைமுறைகள் மற்றும் சந்தை வளர்ச்சி தொடர்பான தகவல்களை வழங்குகிறது. இந்தத் தகவல் பலகை தொழில்துறை, கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் மின்சார வாகனங்களின் பயனர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.

2022 ஆம் ஆண்டில் 6,90,550 மின்சார இரு சக்கர வாகனங்கள் விற்பனையானதாகவும் 2030 ஆம் ஆண்டில் இது ஒரு கோடியே 39 லட்சமாக உயரும் எனவும், ஈவி-ரெடி இந்தியா (evreadindia) தகவல் பலகை கணித்துள்ளது.

Vignesh

Next Post

அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய அமைச்சர் பொன்முடி..!! செம்மண் குவாரி வழக்கு இன்று மீண்டும் விசாரணை..!!

Tue Oct 17 , 2023
விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீதான செம்மண் குவாரி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2006 – 2011 வரை திமுக ஆட்சியில் இருந்தது. அப்போது, உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிதான் கூடுதலாக கனிம வளத்துறையையும் கவனித்து வந்தார். பொன்முடி கனிம வளத்துறையில் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம், பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் […]

You May Like