fbpx

வாவ் சூப்பரான ஆஃபர்.! டிகிரி முடிச்சிருந்தா போதும்.! र.88,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை.! உடனே அப்ளை பண்ணுங்க.!

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபீசர்ஸ் பணிகளுக்கான காலியாக உள்ள 250 இடங்களை நிரப்புவதற்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.

மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்த நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயதை பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான உச்சம் பட்ச வயது வரம்பு 30 ஆகும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 வயது உச்சபட்ச வயது வரம்பிலிருந்து தளர்வு வழங்கப்பட்டிருக்கிறது. ஓ.பி.சி பிரிவினருக்கு 3 வயதும் பொதுப்பணித்துறையில் பணியாற்றியவர்களுக்கு 10 வயதும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க டிகிரியில் ஏதேனும் ஒரு பாட பிரிவில் 60% மதிப்புடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றால் போதுமானது.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் 23.01.2024 தேதிக்குள் அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பொது பிரிவினருக்கு கட்டணமாக ரூபாய் 1,000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி/எஸ்.டி மற்றும் பொதுத்துறையில் பணியாற்றியவர்களுக்கு கட்டணமாக 250 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக ரூபாய் 88,000/- வரை வழங்கப்படும் என அந்த நிறுவனத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சரி பார்த்து குறித்த தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை https://uiic.co.in/recruitment/details/15299 இந்த முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Next Post

வந்தாச்சு...! அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம்...! தமிழக அரசு அரசாணை வெளியீடு

Wed Jan 10 , 2024
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2023 அக்டோபர் 31-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் என 2 கோடியே 19 லட்சத்து 57,402 பேருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்க ரூ.238 கோடியே 92 லட்சத்து […]

You May Like