Flood: சீனாவின் குவாங்டோங் (Guangdong) மாநிலத்தில் பெய்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சீனாவிம் குவாங்டோங் மாநிலத்தில் கடந்த சில நாள்களாகக் கனத்த மழை பெய்வதால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நிலச்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்கவும், நிவாரணப் பொருள்களை விநியோகிக்கவும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகுகள் மூலம் மீட்கப்படுகின்றனர். மத்திய-வட பகுதிகளில் பெய் (Bei) ஆற்றின் கரையோரம் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
100,000துக்கும் அதிகமானோர் வீடுகளிலிருந்து வெளியேற நேர்ந்தது. குவாங்சாவ் (Guangzhou) நகரின் பாயுன் (Baiyun) அனைத்துலக விமான நிலையத்தில் சில விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. மேலும் சில தாமதமடைந்துள்ளன. 3 நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Readmore: Tn Govt: 2-ம் கட்ட வாக்கு பதிவு… தமிழகத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை…!