Tn Govt: 2-ம் கட்ட வாக்கு பதிவு… தமிழகத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை…!

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்காக வெளி மாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மக்களவை பொதுத் தேர்தல் கேரளாவில் ஏப்.26-ம் தேதியும், ஆந்திராவில் மே 13-ம் தேதியும், கர்நாடகாவில் முதல்கட்டம் ஏப்.26-ம் தேதியும், 2-ம் கட்டமாக மே 7-ம் தேதியும் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கர்நாடகா, கேரளா, ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர்.

வாக்குரிமை உள்ள தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் அவர்கள் தம் சொந்த மாநிலத்துக்குச் சென்று வாக்களிக்க வேண்டியுள்ளது. இதற்கு ஏதுவாக தேர்தல் நாட்களில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். தவறும் நிறுவனங்கள் மீது மாநில மற்றும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

தொழிலாளர் இணை ஆணையர், மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் தே.விமலநாதனை 944539880, 044-24335107 ஆகிய எண்களிலும், உதவி ஆணையர் சென்னை முதல் வட்டம் எம். வெங்கடாச்சலபதியை 7010275131, 044-24330354, 2-ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சுபாஷ்சந்திரனை 8220613777, 044-24322749, 3-ம் வட்ட உதவி ஆணையர் சிவக்குமாரை 9043555123, 044-4322750 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். மாவட்ட கட்டுப்பாட்டறையில், முதல் வட்ட தொழிலாளர் துணை ஆய்வாளர் சி.விஜயலட்சுமியை 9840829835, 044-24330354, 6-ம் வட்ட துணை ஆய்வாளர் இ.ஏகாம்பரத்தை 9790930846, 044-24330354, 9-வது வட்ட துணை ஆணையர் ஆர்.வேதநாயகியை 9884264814, 044-24330354 எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

திமுகவில் பரபரப்பு.. பெண் கவுன்சிலர் எழுதிய ராஜினாமா கடிதம்...!

Wed Apr 24 , 2024
திருநெல்வேலி மாநகராட்சி 36-வது வார்டு திமுக கவுன்சிலர் சின்னத்தாய் கிருஷ்ணன் எழுதிய ராஜினாமா கடிதத்தால் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டது. கடிதத்தின் விவரம்: எனது வார்டு பகுதியான கோரிப்பள்ளம், பெரியார்நகர் ஆகிய பகுதிகளுக்கு பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள சரோஜினி நீர்த்தேக்க தொட்டியின் மூலம் பல ஆண்டுகளாக ஒருநாள்விட்டு ஒருநாள் தண்ணீர் விநியோகம் வழங்கப்பட்டு வந்தது. மாநகராட்சி அதிகாரி, உயர் ஜாதி மாமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து என்னை பழிவாங்கும் நோக்கில் அந்த […]

You May Like