சனி பகவான் பார்வையில் இருந்த ராகு பகவான் குருவை விட்டு விலகி குருவின் வீடான மீன ராசியில் பயணிக்கிறார். கேது பகவான் சுக்கிரன் வீட்டிலிருந்து விலகி புதனில் அமர்ந்துள்ளார். ராகு கேது பெயர்ச்சியால் உலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
ராகு கேது இடப்பெயர்ச்சியால் ராகுவும் கேதுவும் எந்த ராசியில் இருக்கின்றதோ அதுதான் அவர்களின் வீடு. ராகு குரு பகவானைப் போலவும் கேது பகவான் புதன் பகவானைப் போலவும் செயல்படுவார். கேது ஆன்ம காரகன் கடன், மன உளைச்சல், மன சஞ்சலம், மன விரக்தியை அதிகப்படுத்துவார். ராகு என்றால் ஆயுள் கண்டம், மரண பயம், நஷ்டம், சிறை, போலீஸ் பிரச்சனையை உண்டாகும். பண வரவையும் கொடுத்து செலவு செய்ய வைப்பார் ராகு.
மீன ராசி கால புருஷ தத்துவப்படி 12ஆம் வீடு. விரைய ஸ்தானத்தில் ராகு அமர்வதால் மக்கள் சேமிக்கும் பழக்கத்தை குறைத்துக்கொண்டு நிறைய செலவு செய்வார்கள். மீன ராசியில் பாம்பு கிரகமான ராகு அமர்வதால் கைத்தொழில் வளர்ச்சி அடையும். உணவு உற்பத்தி குறையும். பருவம் தவறிய மழையால் வெள்ளப்பெருக்கு நிகழும். 2015இல் சென்னையில் எப்படி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோ அதே போல 2023 டிசம்பர் மாதம் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடல் கொந்தளிப்புகள் ஏற்படும்.
கடல் சார்ந்த நகரங்களான சென்னை, நாகை, வேதாரண்யம், கோடியக்கரை போன்ற ஊர்கள் எல்லாம் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கடல் சீற்றம் ஏற்படும். சுனாமி போல பாதிப்புகள் ஏற்பட்டு கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. குருவைவிட்டு விலகிய ராகு குரு பகவான் வீட்டிற்கு வந்து அமர்வதால் நல்லதே நடக்கும். சுற்றுலா துறை வளர்ச்சி அடையும். நிறைய செலவுகள் அதிகரிக்கும். பாரம்பரிய தொழில் அபிவிருத்தியாகும். தண்ணீர் தொடர்பான தொழில் வளர்ச்சியடையும். வனங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
கேது பகவான் புதன் வீட்டில் பயணம் செய்வதால் சாதாரண பிரச்சனைகள் கூட பூதாகரமாக வெடிக்கும். விவாதங்கள் அதிகரிக்கும். போராட்டங்கள் வெடிக்கும். சாதாரண விஷயங்கள் கூட சமூக வலைத்தளங்கள் மூலம் அதிகம் பரவி பதற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கல்வித்துறையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும். நீட் தேர்வு போல பொறியியல் கல்விக்கும் பொது நுழைவு தேர்வு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
நிறைய பேர் தொழிற்கல்வி படிக்க ஆர்வம் காட்டுவார்கள். யோகா கலை வளர்ச்சியடையும். மருத்துவத் துறையில் மாற்றம் ஏற்படும். சித்தா, ஆயுர்வேத படிக்க ஆர்வம் காட்டுவார்கள். சித்த மருத்துவர்கள் வளர்ச்சியடைவார்கள். சித்த மருத்துவத் துறை வளர்ச்சியடையும். இந்த ராகு கேது பெயர்ச்சியால் உலக மக்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.