fbpx

மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறும் வரை…! – அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

”மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறும் வரை அழுத்தம் கொடுப்போம்” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ”தமிழகத்தில் எந்த இடத்திலும் போதைப் பொருட்கள் இல்லாத அளவுக்கு முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும் பணி இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும், மின் திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். மின்சார சட்டத்திருத்த மசோதா நடைமுறைக்கு வரும் பட்சத்தில் வீடுகளுக்கு வழங்கக்கூடிய 100 யூனிட் இலவச மின்சாரம், குடிசைகளுக்கான விவசாயிகள், நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் எனு அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்படக் கூடிய சூழல் உருவாகும்.

மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறும் வரை...! - அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்தக்கூடிய நுகர்வோர்கள், தொழிற்சாலைகள் பகுதிகளிலே அவர்களின் கவனம் இருக்கும். ஏழைகள் மீது கவனம் கொள்ளமாட்டார்கள். ஒட்டு மொத்தமாக அரசினுடைய கட்டமைப்பு, மின்வாரியத்தினுடைய கட்டமைப்பு நாம் உருவாக்குகின்ற கட்டமைப்பை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடிய அந்த சூழல்தான் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன. மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறும் வரை அழுத்தம் கொடுப்போம்”. இவ்வாறு அவர் கூறினார்.

Chella

Next Post

நீச்சல் உடையில் போஸ் கொடுத்த பேராசிரியர்.. இன்ஸ்டாகிராமில் வைரல்... கொதித்தெழுந்த பெற்றோர்..!

Thu Aug 11 , 2022
கொல்கத்தாவில் இருக்கும் செயின்ட் சேவியர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்த பேராசிரியர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதை அந்த கல்லூரியில் படிக்கு மாணவர்கள் மற்றும் அங்கு வேலை பார்க்கும் பேராசிரியர்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் செல்போனில் அந்த புகைப்படத்தை மகன் பார்த்துக் கொண்டிருந்ததை வீட்டில் இருந்த தந்தை கவனித்திருக்கிறார். நீச்சல் உடை போட்டோவை தன் மகன் ரசிப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த தந்தை, […]
7 ஆண்டுகளில் 14 முறை கட்டாய கருக்கலைப்பு..! உறவில் இருந்தவர் உதறித்தள்ளியதால் விபரீத முடிவு..!

You May Like