fbpx

நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் திறப்பு…..! நாட்டுக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகிஆதித்யநாத்…..!

இன்று காலை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணித்தார். அதேபோல மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இடத்தில் தமிழகத்தின் செங்கோலும் நிறுவப்பட்டது.

இத்தகைய நிலையில்தான் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறந்து வைக்கப்பட்ட இன்றைய தினம் நாட்டு மக்கள் அனைவருக்கும் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.


இது குறித்து அவர் தன்னுடைய வலைதள பதிவில் பதிவு ஒன்றையும் எழுதித்தள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது இது வரலாற்று சிறப்புமிக்க தருணம். புதிய நாடாளுமன்ற கட்டிடம் புதிய இந்தியாவின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளின் சின்னமாக இருக்கிறது இந்த பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறார். நாட்டு மக்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Next Post

புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி…..! மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கும் விவசாய சங்கம்…..!

Sun May 28 , 2023
உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிட்ஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் ஒரு மாத காலமாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கியதாக இவருக்கு எதிராக புகார்கள் குவிந்து வருகின்றன. இந்தப் புகார்கள் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பூஷன் சிங் மீது வழக்கப்பதிவு செய்து சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு […]

You May Like