உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் மொபைல் சார்ஜரிலிருந்து மின்சாரம் தாக்கி, இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.
பல்லியா மாவட்டத்தில் உள்ள சரங்பூர் கிராமத்தைச் சேர்ந்த நீது (22) தனது போனில் இருந்து சார்ஜரை அகற்றும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள், குச்சியால் அவரைப் பிரித்து, உடனடியாக பான்ஸ்தியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது நீது இறந்துவிட்டதாக பான்ஸ்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (எஸ்எச்ஓ) சஞ்சய் சிங் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து குடும்பத்தினர் எந்த புகாரும் அளிக்கவில்லை.
மற்றொரு சம்பவத்தில் நெல் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி 50 வயதான பெண் உயிரிழந்தார். சிகாரியா குர்த் கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பிந்து தேவி என்பவர் நெல் வெட்டும் இயந்திரத்தில் அடிபட்டார். பலத்த காயமடைந்த பிந்து தேவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் வழியிலேயே இறந்தார். இறந்தவரின் கணவர் ராதா கிஷூன் ராமின் புகாரின் பேரில், டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கட்வார் காவல் நிலையப் பொறுப்பாளர் மூல்சந்த் சௌராசியா தெரிவித்தார். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளனர். இந்த இரண்டு சம்வங்களும் அவர்களது குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் படி இரண்டு சம்பவங்களும் தற்செயலானவை என போலிஸார் தெரிவிக்கின்றனர். மீதி விசாரணை முடிந்த பிறகுதான் விஷயம் தெரியவரும்.
Read more ; லேட்டாக சமைத்த மகள்; குக்கரால் அடித்தே கொன்ற கொடூர தந்தை…