fbpx

UPI Lite பயனர்களே!. வரம்பு ரூ.2,000ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்வு!. ரிசர்வ் வங்கி அதிரடி!

UPI Lite பயனர்களுக்கான வரம்பு ரூ.2000 ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) மூலம் செப்டம்பர் 2022 இல் தொடங்கப்பட்ட UPI Lite, பேடிஎம் (Paytm), பீம் ஆப் (BHIM App), கூகுள் பே (Google Pay) மற்றும் இன்னும் பல தளங்களில் கிடைக்கிறது. இந்தநிலையில், இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமையன்று UPI Liteக்கான வாலட் வரம்பை ரூ.2,000ல் இருந்து ரூ.5,000 ஆக மாற்றியது. அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிகளின்படி, ஆஃப்லைன் கட்டமைப்பின் கீழ் UPI Liteக்கான அதிகபட்ச பரிவர்த்தனை வரம்பு, ஒரு பரிவர்த்தனைக்கு 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, ஆஃப்லைன் கட்டமைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், UPI Liteக்கான மேம்படுத்தப்பட்ட வரம்புகள் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 1,000 ஆக இருக்கும் என்றும், எந்த நேரத்திலும் மொத்த வரம்பு ரூ.5,000 ஆக இருக்கும் என்றும் RBI கூறியுள்ளது,. மேலும் ஆஃப்லைன் கட்டமைப்பின் கீழ் டிஜிட்டல் பேமெண்ட் பரிவர்த்தனைக்கு அதிகபட்ச வரம்பு ரூ 500 என்றும், எந்த நேரத்திலும் பணம் செலுத்தும் கருவிக்கு ரூ 2,000 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட பரிவர்த்தனை மற்றும் UPI Liteக்கான மொத்த வரம்புகள் உடனடியாக அமலுக்கு வர உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம், யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) ஒரே மாதத்தில் 16.58 பில்லியன் நிதி பரிவர்த்தனைகளைச் செய்து வரலாற்று மைல்கல்லை எட்டியது, இது இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் அதன் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: ’ரேஷன் அட்டைதாரர்களை திருப்பி அனுப்பக் கூடாது’..!! ’இதை பயன்படுத்தி பொருட்களை வழங்குங்கள்’..!! அதிரடி உத்தரவு..!!

Kokila

Next Post

டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றவரா நீங்கள்..? மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வேலை..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!

Thu Dec 5 , 2024
A notification has been issued to fill vacant positions at Mineral Exploration and Consultancy Limited.

You May Like