fbpx

கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம்….! பொது வருங்கால வைப்பு நிதி முக்கிய அறிவிப்பு…!

பொது வருங்கால வைப்பு நிதி வருடாந்தர கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து முதுநிலை துணை மாநிலக் கணக்காயர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து மத்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள், தமிழக ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை, மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் 2023-24-ம் ஆண்டுக்கான பொது வருங்கால வைப்பு நிதி, வருடாந்தர கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனை தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்தின் http://cag.gov.in/ae/tamil-nadu/en) என்ற இணைய தளத்தில் அதிகாரிகள், சந்தாதாரர்கள் ஆகியோர் கணக்கு விவர அறிக்கையை தங்கள் இணையதள பக்கத்தில் “online Services – Want to know your GPF status”ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று முதுநிலை துணை மாநிலக் கணக்காயர் கார்த்திக் குமார் கூறியுள்ளார்.

Vignesh

Next Post

மளமளவென குறைந்த தங்கம் விலை…! 55 ஆயிரத்துக்குள் வந்தது..! தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்..!

Tue May 21 , 2024
today gold rate in chennai

You May Like