fbpx

UPSC Exam Results..!! யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது..!! முதல் 4 இடங்களை பிடித்த பெண்கள்..!!

யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியான நிலையில், இந்திய அளவில் முதல் 4 இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் முதலிய உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான சிவில் சர்வீச் தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 நிலைகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், கடந்தாண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி, முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் ஜூன் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான முடிவுகள் டிச. 6 ஆம் தேதி வெளியானது. அடுத்த நிலையான நேர்காணல் கடந்த மே 18 ஆம் தேதி முடிவடைந்தது.

இந்நிலையில், இந்த யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேர்வர்கள் தங்களது முடிவுகளை, upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,011 இடங்களுக்கு நடத்தபட்ட தேர்வில், மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் முதல் 4 இடங்களை பெண்கள் பிடித்து அசத்தியுள்ளனர். இந்தியளவில் இஷிதா கிஷோர் முதலிடமும், கரிமா லோகியா இரண்டாம் இடமும், உமா ஹராதி மூன்றாம் இடமும், ஸ்மிரிதி மிஷ்ரா நான்காம் இடமும் பிடித்துள்ளனர்.

Chella

Next Post

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு…..! புதிய காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார் பிரணீத்….!

Tue May 23 , 2023
செங்கல்பட்டு மாவட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உதயமானது. அப்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக கண்ணன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து, சுந்தரத்தனம், விஜயகுமார், அரவிந்தன், சுகுணா சிங் பிரதீப் உள்ளிட்டோர் அந்த மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளராக அடுத்தடுத்து பணியாற்றினர். இதற்கு நடுவே கள்ளச்சார விவகாரத்தில் பிரதீப்பை தமிழக அரசு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி […]

You May Like