பெட்ரோல் விலை ரூ.5 குறைப்பு.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு…

மகாராஷ்டிராவில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்..

நாடு முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் ரூ.100-க்கும் மேல் தலைநகர் டெல்லி, மத்தியப்பிரதேசம், தமிழகம், ராஜஸ்தான், ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், சாமானிய மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு என்ன காரணம்..? மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் பரபரப்பு தகவல்..!

இந்த சூழலில் கடந்த மே மாதம் பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியை மத்திய அரசு குறைத்தது.. பெட்ரோலுக்கு ரூ.8ம், டீசலுக்கு ரூ.6ம் கலால் வரியைக்குறைக்கப்பட்டதால் பெட்ரோல் விலை ரூ. 9.50ம் டீசல் விலை ரூ.7 குறையும் என்று மத்திய அரசு நேற்று முன் தினம் அறிவித்திருந்தது.. இதை பின்பற்றி, அனைத்து மாநிலங்களும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.. கலால் வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து, பல மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைத்தன. அதன்படி, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிஷா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் விலை மேலும் குறைந்துள்ளன. இதைதொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து வந்தது..

இந்நிலையில் மகாராஷ்டிராவில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.. அதன்படி, மகாராஷ்டிராவில் ஒரு லிட்டர் பெட்ரொல் ரூ,5, டீடல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது.. அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதிய அரசின் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகாவும் அவர் கூறியுள்ளார்.. இது ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..

மகாராஷ்டிராவில் அரசுக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களே போர்க்கொடி தூக்கியதால் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழந்தது.. புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார்.. அவர் பதவியேற்ற நாளில் “மகாராஷ்டிரா அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) முறையே லிட்டருக்கு ரூ.5 மற்றும் ரூ.3 குறைக்கும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

கள்ளக்காதலனை திட்டம் போட்டு போட்டு தள்ளிய... கள்ள காதலியின் வெறித்தனம்....!

Thu Jul 14 , 2022
கன்னியாகுமரியில், கள்ளக்காதலனை கொடூரமாக ஷிபா என்ற பெண் கொலை செய்துள்ளார். ஆரல்வாய்மொழியில் உள்ள இ.எஸ்.ஐ. ஹாஸ்பிடல் காலை 7 மணி முதல் 10.30 மணி வரை, மேலும் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை வேலை நேரம் ஆகும். இந்த இடைப்பட்ட நேரத்தில் அங்கு வேலை செய்யும் சதீஷ்குமார் அவரது கள்ளக் காதலி ஷிபாவை சந்திக்க விரும்பினார். எனவே அவரை தொடர்பு கொண்டு ஹாஸ்பிடலுக்கு வருமாறு அழைத்தார். […]

You May Like