fbpx

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் எத்தனை வயது வரை டெபாசிட் செய்ய முடியும்? முழு விவரம் இதோ…

சுகன்யா சம்ரித்தி யோஜனா எனும் இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை ஈடுசெய்யும் இந்த திட்டம், 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம், ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயதாகும் வரை எந்த நேரத்திலும் அந்த பெண் குழந்தையின் பெயரில் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரால் கணக்கினை அஞ்சலகங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.1000 கொண்டு தொடங்க முடியும்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா இத்திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படுகிறது. ஆனால் 15 வயது வரை மட்டுமே SSY கணக்குகளில் முதலீடு செய்ய முடியும் என்ற தவறான தகவல் பொதுவாக நிலவி வருகிறது. உண்மையான விதிகள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.

மத்திய அரசு வகுத்துள்ள 2019 இன் விதிகளின் படி, கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரை SSY கணக்கில் டெபாசிட் செய்யலாம். உங்கள் பெண் குழந்தைக்கு 9 வயதாக இருக்கும் போது, ​​நீங்கள் ஒரு SSY கணக்கைத் திறந்தால், 15 ஆண்டுகளுக்கு, அதாவது 24 வயதை அடையும் வரை அந்தக் கணக்கில் டெபாசிட் செய்யலாம். 21 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கு முதிர்ச்சியடையும். அதாவது, பெண் குழந்தைக்கு 9 வயதாக இருக்கும்போது கணக்கு தொடங்கப்பட்டால், கணக்கு 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும், அதாவது அந்த பெண்ணுக்கு 30 வயதை அடையும் போது முதிர்வு தொகையை பெறலாம். ஒரு வேளை 21 ஆண்டுகள் முடிவதற்குள் SSY கணக்கை முன்கூட்டியே மூடுவதற்கு கணக்கு வைத்திருப்பவர் திருமணத்தின் காரணமாக அத்தகைய கோரிக்கையுடன் விண்ணப்பித்தால் அனுமதிக்கப்படும். ஆனால் திருமணம் நடந்த நாளிலிருந்து ஒரு மாதத்திற்கு முன்பு அல்லது திருமணமான தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் கணக்கை முடித்துக்கொள்ள வேண்டும்.

Kokila

Next Post

#நாமக்கல்: தாயின் கண்ணெதிரே குழந்தை மிஷினில் நசுங்கி உயிரிழந்த சோகம்..!

Thu Jan 12 , 2023
நாமக்கல் மாவட்ட பகுதியில் உள்ள ஒலப்பாளையத்தில் வசிப்பவர் பிரபாகரன். இவரது நார்மிலில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சாரம் மற்றும் மனைவி மனிஷாதேவி இருவரும் வேலை பார்த்து வருகின்றனர்.  இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை தீஸ்குமார் எனபவர் உள்ளார். இந்த நிலையில், மனிஷாதேவி தனது குழந்தை தீஷ்குமாரை மடியில் வைத்து கொண்டே தேங்காய் நார் மில்லில் மிஷினில் வேலை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.  மடியில் விளையாடிக் கொண்டிருந்த தீஷ்குமார் திடீரென ஓடிக்கொண்டிருக்கும் […]

You May Like