யூரிக் ஆசிட் பிரச்சனை பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு மூட்டு வலி மற்றும் கை கால்களில் இருக்கக்கூடிய உடல் இணைப்புகளில் அதிகமான வலி ஏற்படும். இதற்கு சிறுநீரகத்தில் இருக்கக்கூடிய ப்யூரின் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது அதிலிருந்து வெளியேறக்கூடிய யூரிக் அமிலம் ரத்தத்தில் கலந்து மூட்டுகளில் தேங்கி கொள்கிறது. இதன் காரணமாக அதிகமான மூட்டு வலி மற்றும் முதுகு வலியாகியவை ஏற்படுகின்றன.
இந்த யூரிக் அமிலம் பிரச்சனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கக்கூடியது. அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்ய வேண்டும். ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக கலந்தால் கீல்வாதம் மற்றும் மூட்டு வலி போன்றவை ஏற்படுவதோடு சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது. எனவே மூட்டு வலி மற்றும் அதிகமான முதுகு வலி இருந்தால் மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
மருத்துவர்கள் இது தொடர்பான ரத்த பரிசோதனையின் மூலம் ரத்தத்தில் இருக்கக்கூடிய யூரிக் ஆசிட் அளவை கண்டறிந்து அதற்கேற்றார் போல் சிகிச்சைகளுக்கும் பரிந்துரைக்கப்படும். இது போன்ற சோதனைகள் சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகளை கொண்டு நடத்தப்படும். இந்த பரிசோதனைகளின் மூலம் ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை கண்டறிந்த பின்னர் அதனை கட்டுப்படுத்துவதற்காக மருந்துகள் எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்
மேலும் இதற்கான உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுவதன் மூலமும் யூரிக் அமில பிரச்சனையில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். சிக்கன் சிவப்பு இறைச்சி மற்றும் கடல் உணவுகள் செரிமானத்தின்போது அதிக அளவு யூரிக் அமிலத்தை உற்பத்தி செய்கிறது. எனவே இது போன்ற உணவுகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போதும் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. எனவே நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை எப்போதும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். உடல் பருமனும் யூரிக் அமில பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும். நார் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம்.