Zelensky: அமெரிக்காவும் உக்ரைனும் அடுத்த வாரம் சவுதி அரேபியாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
டிரம்புடனான மோதல்போக்குக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, வரும் திங்கள் கிழமை சவுதி அரேபியா செல்லவுள்ளார். அங்கு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசவுள்ளார்.
இதுதொடர்பாக, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எழுதியுள்ள கடித்தத்தில், தன்னுடைய நாடு அமைதியை விரும்புகிறது, அமைதியை நிலைநாட்ட மிகவும் ஆர்வமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, வரும் திங்கள் கிழமை சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டுள்ளேன்; அங்கு தங்கி, அமைதி குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் எங்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் கூறுகையில், உக்ரைனிய குழுக்களுடனான சந்திப்பு அடுத்த வாரம் சவுதி அரேபியாவில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அமைதி ஒப்பந்த கட்டமைப்பு மற்றும் ஆரம்ப போர் நிறுத்தம் குறித்து கியேவுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நடந்த மோதலுக்குப் பிறகு, ஜெலென்ஸ்கியின் கடிதத்தால் டிரம்ப் மகிழ்ச்சியடைந்ததாக விட்காஃப் கூறியுள்ளார். ஜெலென்ஸ்கியின் கடிதத்தில் அமெரிக்கா, உக்ரைனுக்காக செய்த அத்தனை உதவிக்கு ஒரு பாராட்டும், நன்றி உணர்வும் இருந்தது,” அவர் மேலும் கூறினார்.
இந்தநிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை ரியாதிற்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர், அங்கு உக்ரைன் அதிபர் வொலோஃடிமிர் ஜெலென்ஸ்கியின் முக்கிய உதவியாளர் ஆண்ட்ரி எர்மக் ஆகியோருடனான சந்திப்பில் பங்கேற்கின்றனர் என்று ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
Readmore: 1,100 பேரை பணி நீக்கம் செய்த ஜியோஸ்டார்!. ஜூன் வரை தொடரும்!. ஊழியர்கள் அதிர்ச்சி!