’உஷாரய்யா உஷாரு’..!! பெற்றோர்களே இனி இந்த தவறை செய்தால் சிறைக்குத்தான் போகணும்..!!

18 வயதிற்குட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிப்பட்டால் வாகனப்பதிவு ரத்துச் செய்யப்படுவதுடன், ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் விபத்துகளை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 18 வயது நிரம்பாதவர்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்பது விதி. ஆனால், 18 வயது நிறைவு பெறாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் பல விபத்துகள் அதிகமாகிறது. இதனை பலமுறை காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை கண்டித்தும் இது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், இந்த விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்துத் துறை ஒரு விதியை அமல்படுத்தவுள்ளது. அதன்படி, 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மேலும், பிடிபடும் சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமமும் வழங்கப்படாது என்று அதிரடியாக தெரிவித்துள்ளது.

மேலும், 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால், அவரின் பெற்றோருக்கு 3 மாத சிறையும், ரூ.25,000 அபராதமும் விதிக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. இந்த விதி வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : நீங்க அடிக்கடி இந்த மாதிரி ஆகுறீங்களா..? தினசரி இதை மட்டும் பண்ணுங்க..!! எல்லாம் பறந்துபோயிரும்..!!

English Summary

The transport department has warned that minors under the age of 18 will face cancellation of their vehicle registration and a fine of Rs 25,000 if they are caught driving.

Chella

Next Post

'உல்லாசத்திற்கு வரலைன்னா.. வீடியோவை வெளியிட்டு விடுவேன்!' பெண்ணை மிரட்டிய வாட்ச்மேன் கைது..!

Thu May 30 , 2024
உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்த வாட்ச்மேன்யை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  கோயம்புத்தூர் மாவட்டம், வேலாண்டிபாளையம் காந்தி காலனியில் மேற்கு வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி. 49 வயதான இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் வாட்ச்மேன் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, அங்கு வேலை பார்த்து வந்த 47 வயது பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி, தனிமையில் உல்லாசமாக […]

You May Like