fbpx

முதல்வரின் வருகைக்காக பள்ளி வாகனங்களை பயன்படுத்துவதா..? விடுமுறையும் அறிவிப்பு..!! கடுப்பான Annamalai..!!

முதலமைச்சர் வருகைக்காக பள்ளி வாகனங்களை, பயன்படுத்த வற்புறுத்தியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”தமிழக முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் இன்று பொள்ளாச்சி செல்லவிருப்பதால், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளில் இருந்தும், பள்ளி வாகனங்களை, முதலமைச்சர் வருகைக்காகப் பயன்படுத்த வற்புறுத்திப் பெற்றுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தால், மாணவர்கள் பள்ளிக்கு வர போதுமான வாகனங்கள் இல்லாமல், பல பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பள்ளியிறுதிப் பொதுத்தேர்வுகள் நடைபெறும் இந்த நேரத்தில், தங்கள் விளம்பர அரசியலுக்காக, மாணவர்கள் பயணம் செய்யும் வாகனங்களைப் பிடுங்கிக் கொள்ளும் உரிமையை, திமுக அரசுக்கு யார் கொடுத்தது..? மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திமுகவின் இது போன்ற அதிகார துஷ்பிரயோகத்துக்குத் துணை செல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருபுறம், போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்த தவறி, இளைஞர்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், பள்ளி மாணவர்களுக்கான, பொதுத்தேர்வுகள் நடைபெறும் நேரத்தில், தங்கள் அரசியலுக்காக பள்ளி வாகனங்களை முறைகேடாக கட்டாயப்படுத்தி வாங்குவது, அராஜகத்தின் உச்சம் என்பதை விளம்பர விரும்பி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : Ration | வந்தாச்சு புதிய ரேஷன் கார்டு..!! பெண்களே ரூ.1,000 உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க ரெடியா..?

Chella

Next Post

NIA | "ஓஹோ அப்படி போகுதா கதை"… வரலட்சுமி விவகாரத்தை வைத்து மிரட்டப்பட்டாரா சரத்குமார்.?

Wed Mar 13 , 2024
வரலட்சுமிக்கு NIA சம்மன் அனுப்பிய விவகாரத்தை வைத்து பாஜக(BJP) சரத்குமாருக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்ற கருத்து தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது நடிகர் மற்றும் அரசியல்வாதியான சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக நேற்று அறிவித்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரதிய ஜனதா கட்சியுடன்(BJP) கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்திருப்பது சர்ச்சையை […]

You May Like