கடந்த 5 ஆண்டுகளாக 6,35,000 பேரின் பான் அட்டைகளை முறைகேடாகப் பயன்படுத்தி அதன் மூலம் 2,660 போலி நிறுவனங்களை உருவாக்கி, பல கோடி மதிப்பிலான ஜிஎஸ்டி வரியை ஏமாற்றி வந்த 8 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த பகீர் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மொத்த வரி ஏய்ப்பு தொகையை இன்னும் கண்டறியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது ரூ. 10,000 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மோசடி கும்பல் இல்லாத கற்பனையான நிறுவனங்களை உருவாக்கி, அதன் மூலம் அரசாங்கத்திடமிருந்து உள்ளீட்டுக் கடன் வரியைத் திரும்பப் பெற்றதாகவும், இதனால் ஆரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாசின் ஷேக் (38), ஆகாஷ் சைனி(21), அதுல் செங்கர்(23), அவ்னி(25), தீபக் முர்ஜானி(48), அவரது மனைவி வினிதா(45), விஷால்( 20) மற்றும் ராஜீவ்(38) ஆகிய 8 பேர் கொண்ட கும்பலை டெல்லி மது விகாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளர்.