fbpx

கண்ணோஜ் சிறுமி தாக்கப்பட்ட வழக்கில் அதிரடி தகவல்கள்.. ஆபத்து கட்டத்தை தாண்டாத சிறுமி.!

உத்திரபிரதேச மாநிலத்தின் கண்ணஜ் பகுதியில் ஒரு 12 வயது சிறுமி ரத்த வெள்ளத்தில் மூழ்கியவாறு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். அப்பொழுது அந்த சிறுமியை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கவோ அவருக்கு உதவி செய்யவும் யாரும் முற்படாமல் கும்பல் கும்பலாக செல்போனில் படம் பிடித்த காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

12 வயதான அந்த சிறுமி நேற்று மாலை உண்டியல் வாங்குவதற்காக அருகில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார். அதன் பின்னர், அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரை அங்கும் இங்கும் தேதி அலைந்த பெற்றோர் போலீசில் சென்று புகார் கொடுத்துள்ளனர்.

அந்த சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பாரோ என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சிறுமி விருந்தினர் மாளிகைக்கு பின்புறம் கிடந்த நிலையில் அங்கு இருக்கும் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர்.

அதன்படி சிறுமி ஒரு இளைஞருடன் பேசிக் கொண்டிருப்பது சிசிடிவி பதிவாகியுள்ளது. அந்த இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். அந்த சிறுமி இன்னும் ஆபத்தான கட்டத்தில் தான் இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

Rupa

Next Post

அதிக மதிப்பெண் பெற்ற பெண்ணை தலைமையாசிரியராக்கி அழகு பார்த்த ஆசிரியர்.!

Fri Oct 28 , 2022
விழுப்புரம் பகுதியில் திரு.வி.க. வீதியில் அமைந்துள்ள அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 4 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சசிகலா என்ற தலைமை ஆசிரியர் சிறப்பாக தனது பணியை செய்து வருகின்ற நிலையில், மாணவிகள் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும் என இவர் செய்த செயல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. காலாண்டு தேர்வு தொடங்குவதற்கு சில நாட்கள் இருந்த நிலையில் காலாண்டு தேர்வில் […]

You May Like