பொதுவாக ஆண்களும் சரி, பெண்களும் சரி ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பவர்களை தவிர்த்து, பல பேருக்கு திருமணத்தை மீறிய தகாத உறவில் ஒரு அதீத ஆர்வம் இருக்கும்.
அப்படிப்பட்ட அந்த அதீத ஆர்வமே அவர்களை பல நேரங்களில், மிகப்பெரிய சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும் அப்படி ஒரு சம்பவம் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அதாவது, உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கின்ற கான்பூர் நகரத்தில் திருமணமான ஒருவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்தார். ஆனால் இவருக்கு அதே தகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
முதலில், இருவரும் நட்பாக பழகி அதன் பிறகு நெருங்கி பழகத் தொடங்கி, பின்னர் இருவருக்கும் இடையிலான பழக்கம் கள்ளக்காதலாக உருமாறியது. இருவரும் தனிமையில் பலமுறை சந்தித்து, உல்லாசமாக இருந்துள்ளனர். இதற்கு நடுவே, அந்த இளைஞருடன் திருமணத்தை கடந்த உறவை வைத்திருந்த அந்த பெண்மணி, அந்த இளைஞரே எதிர்பார்க்காத ஒரு முடிவை மேற்கொண்டார்.
அதாவது, அந்த கள்ளக்காதலியின் தோழி ஒருவருக்கும், அந்த இளைஞரின் மீது மோகம் ஏற்பட்டுள்ளது. இதனால், தோழிகள் இருவரும் அந்த இளைஞனை அனுபவிக்க திட்டமிட்டனர். ஆகவே இந்த சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம், தன்னுடைய கள்ளக்காதலனான அந்த இளைஞரை அவருடைய வீட்டிற்கு வரவழைத்த அந்த பெண்மணி அங்கே உல்லாசமாக இருப்பதற்கான வேலைகளை செய்தார். மேலும் தன்னுடைய தோழியோடும் அந்த இளைஞரை உல்லாசமாக இருக்குமாறு பணித்தார்.
ஆனால், இதற்கு அந்த இளைஞர் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதாவது எனக்கு நீ மட்டும் போதும், உன்னை தாண்டி வேறு யாரும் தேவையில்லை என்று வசனம் பேசியுள்ளார். அந்த இளைஞர் இதன் காரணமாக, கள்ளக்காதலர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்துள்ளது. கள்ளக்காதலன் கூறிய பதிலால் ஆத்திரம் கொண்ட அந்த பெண்மணி, இறுதியில் அந்த இளைஞரின் ஆணுறுப்பை கடித்ததாக சொல்லப்படுகிறது.
ஆகவே, வலி தாங்க முடியாத அந்த இளைஞர், கதறி துடித்தபடி அங்கிருந்து தப்பி சென்று தன்னுடைய மனைவி மற்றும் காவல் துறையினருக்கு போன் செய்து, தன்னை எப்படியாவது இங்கிருந்து காப்பாற்றுமாறு தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அவருடைய மனைவி, அந்த இளைஞரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து, அந்த இளைஞரின் மனைவி காவல் நிலையத்தில், புகார் அளிக்க தயாராக இருந்தார். ஆனாலும் இது பற்றி புகார் அளித்தால், தனக்கு அவமானம் ஏற்பட்டு விடும் என்பதால், அந்த இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க விரும்பவில்லை. என்று சொல்லப்படுகிறது.