உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கால்நடைகளை வைரஸ் நோயிலிருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்து, சிறப்பு தடுப்பூசி பிரச்சாரத்தை தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தோல் கட்டி வைரஸ் பாதிப்பால் பல மாநிலங்களில் கால்நடை இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதன் பரவலைத் தடுக்க அதிகாரிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
நிலைமை இயல்பு நிலைக்கு வரும் வரை மாநிலத்தில் கால்நடை கண்காட்சிகளை நடத்துவதை ஒத்திவைக்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான கால்நடை போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும். நோய்த்தொற்றின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை பற்றிய முழுமையான தகவல்களை பால் பண்ணையாளர்களுக்கு வழங்க வேண்டும். பசுக் கூடங்களில் தேவையில்லாதவர்கள் நுழைவதைத் தடை செய்ய வேண்டும். மேலும் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக கால்நடைகளை தோல் கட்டி வைரஸிலிருந்து பாதுகாக்க சிறப்பு தடுப்பூசி பிரச்சாரத்தை நடத்துவது அவசியம் என்று முதல்வர் யோகி வலியுறுத்தினார்.
கொசுக்கள் மூலம் வைரஸ் பரவுவதால், கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஊரக வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைகளின் ஒருங்கிணைப்புடன் சிறப்பு தூய்மைப் பிரச்சாரங்கள் நடத்தப்பட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் தொற்று பரவாமல் இருக்க வேண்டும்,” என கூறினார்.