fbpx

அடுத்த கட்டம்…! மேலிருந்து துளையிடும் பணி தொடங்கியது… 4 நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தகவல்…!

உத்தராகண்டில் இடிபாடுகளுக்கு நடுவே மற்றும் மலைக்கு மேலிருந்து என இரண்டு பக்கம் துளை இட்டு மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு – பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல நிபுணர்கள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு வாரத்திற்கும் மேலாக சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் முக்கிய முன்னேற்றமாக, அவர்களுக்கு உணவு, குடிநீர் செலுத்த 6 இன்ச் அளவில் 57 மீட்டர் நீளமுள்ள துளை வெற்றிகரமாக போடப்பட்டு, ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரைக்கு ஏற்ப தேவையான உணவுகள் குழாய் மூலம் அனுப்பட்டு வருகிறது.

அமெரிக்க ‘ஆகர்’ இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறால் துளையிடும் பணி தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கு நடுவே மற்றும் மலைக்கு மேலிருந்து என இரண்டு பக்கம் துளை இட்டு மீட்பு பணிகள் தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளது. மேலிருந்து துளையிடும் பணி முடிய இன்னும் 4 நாட்கள் ஆகலாம், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் யாருடைய முயற்சி வெற்றி அடையும் என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.

Vignesh

Next Post

Woww..! கல்வி உதவித்தொகை ரூ.50,000 ஆக உயர்வு...! தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை..‌!

Mon Nov 27 , 2023
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள் பிள்ளைகளின் எதிர்காலக் கல்வியை கருத்தில் கொண்டு ஆசிரியர் நல நிதியிலிருந்து ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நிதியுதவியை ரூ.50,000/- வரை உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை; ஒவ்வொரு கல்வியாண்டிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஓய்வு பெற்ற, பணியில் இருக்கும்போது இறந்த ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு பட்டப்படிப்பிற்கு ரூ.5,000/-ம், […]

You May Like