fbpx

“வினையான கிரிக்கெட் விளையாட்டு..” கற்களால் அடித்து கொலை செய்யப்பட்ட 24 வயது இளைஞர்.!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறு 24 வயது இளைஞர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 3 நபர்கள் மீது வழக்குப்பதிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்திர பிரதேச மாநிலத்தின் மீரட் பகுதியைச் சேர்ந்தவர் சுமித். 24 வயதான இவர் நேற்று நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்றிருக்கிறார்.

இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டின் போது நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஹிமான்சு மற்றும் அவரது 2 நண்பர்கள் சுமித்தை தாக்கியதாக தெரிகிறது. அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற சுமித், அருகில் உள்ள கழிவுநீர் வடிகாலில் விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை கற்களால் அடித்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சுமித்தின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் ஹிமான்சு என்பவரை முக்கிய குற்றவாளியாக அடையாளம் கண்டுள்ளனர். மேலும் அவரது இரண்டு நண்பர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட சண்டையில் 24 வயது இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

சீமானை விரட்டிவிட்டு கட்சியை கைப்பற்ற முயற்சி..!! சாட்டை துரைமுருகனின் சதித்திட்டம் உறுதி..!! என்.ஐ.ஏ. அதிர்ச்சி தகவல்..!!

Mon Feb 5 , 2024
சீமான் பெயரை சொல்லி வெளிநாடுகளில் இருந்து சாட்டை துரைமுருகன் தன்னிச்சையாக விடுதலை புலிகள் அமைப்புகளிடம் இருந்து பல கோடி ரூபாய் நிதி பெற்றதும், நாம் தமிழர் கட்சியை கைப்பற்ற முயன்றதும் என்ஐஏ சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. இச்சம்பவம் அக்கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலை புலிகள் அமைப்புகளுடன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் ரகசிய […]

You May Like