மனித உரிமை ஆணையத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
மாநில மனித உரிமைகள் ஆணைய வெள்ளி விழா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.. இந்நிகழ்ச்சியில் தேசிய மனித உரிமை ஆணையத்தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ தமிழகத்தில் 1997-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் மனித உரிமை ஆணையத்தை அமைத்தார்.. மனித உரிமை மாண்புகள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.. மனித உரிமைகளை காக்கும் பொறுப்பில் இருந்து ஒருநாளும் தவறமாட்டோம்..
மனித உரிமை ஆணையத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.. மனித உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள், விளிம்புநிலை மக்களுக்காக போராடி வருபவர்களையும் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஆராயப்படும்.. மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும்.. மனித உரிமை கொள்கை, கோட்பாடுகள் குறித்து அவற்றை பின்பற்றும் முறை குறித்தும் பயிற்சி முகாம்கள் நடத்தப்படும்.. எந்தொரு தனி மனிதரின் உரிமையும் மீறப்பட கூடாது என்பது தான் அரசின் கொள்கை.. ” என்று தெரிவித்தார்..