fbpx

வாவ்…! இனி வாரந்தோறும் சனிக்கிழமை அன்று கால்நடை மருந்தகங்களில் இலவசமாக தடுப்பூசி…!

தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் பெண்களின் வாழ்வாதாரமாக நாட்டுக்கோழி வளர்ப்பு இருந்து வருகிறது. கோழிவளர்ப்பு மூலம் தங்களது குடும்பத்திற்கான முட்டை மற்றும் இறைச்சி தேவைகளையும் அடைவதோடு விற்பனை மூலம் பொருளாதார மேம்பாடு அடைந்து வருகின்றனர்.

கோழிவளர்ப்பு ஊரகப்பகுதிகளில் உபயோகமற்ற தானியமிகுதிகளிலும் நிலத்தில் கிடைக்கக்கூடிய அதன் உணவு வகைகள் மூலமாக நடைபெற்று வருகிறது. கோழிகளை எளிதாக பாதிக்கக்கூடிய நோயாக கோழிக்கழிச்சல் நோய் உள்ளது. அதனைக்கட்டுப்படுத்த வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கால்நடை மருந்தகங்களில் இலவசமாக தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தில் கோழி நோய் தடுப்பூசி இருவார முகாம் நடத்தப்படுகிறது. இவ்வாண்டு பிப்ரவரி முதல் மற்றும் இரண்டாம் வாரம் வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி முகாம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. ஆகவே மேற்கண்ட முகாம்களில் தங்களது கோழிகளுக்கு இலவசமாக கோழி நோய் தடுப்பூசி மருந்தினை செலுத்தி பயனடையலாம்.

Vignesh

Next Post

பாஜகவில் இருந்து அடுத்தடுத்து விலகல்!… காயத்ரி ரகுராமனை தொடர்ந்து அதிமுகவில் இணைந்த பிரபலம்!

Thu Feb 15 , 2024
அண்மையில் காய்த்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிலையில், தற்போது நடிகை கௌதமி மற்றும் பாஜக தென் மாநில சிறுபான்மை அணி பொறுப்பாளர் பாத்திமா அலி ஆகியோரும் அதிமுகவில் இணைந்துள்ளனர். பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தும் தனக்கு கட்சியில் ஆதரவு இல்லை எனக்கூறி, நடிகை கவுதமி அக்கட்சியில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் விலகினார். இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடிகை கவுதமி இன்று […]

You May Like