வடிவேலுக்கு என்னை பார்த்தாலே பிடிக்காது அவரால் பல படங்களில் என்னால் நடிக்க முடியாமல் போனது என்றும் அவர் ஒரு கேவலமான மனிதர் என்றால் அதற்கு எதிர்மறை விவேக் சார் ஒரு தெய்வம் என்று காமெடி நடிகர் சரவணன் ஓபனாக பேட்டியளித்துள்ளார்.
காதல், சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் சரவணன். இவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் வடிவேலு குறித்தும் நடிகர் விவேக் குறித்தும் பேசியுள்ளார். அப்போது, நான் வடிவேலுவுடன் மருதமலை படத்தில் மட்டும் தான் நடித்து இருக்கிறேன். அதன் பிறகு எனக்கு தெரிந்து வேறு எந்த படங்களிலும் நடித்தது இல்லை. அவர் கூட உள்ளவர்கள் யாரையும் வடிவேலு நடிக்கவே விடமாட்டார். மருதமலை படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் நான் வடிவேலு சாரிடம் வாய்ப்பு கேட்கவில்லை இயக்குனர் சுராஜ் தான் என்னை படத்தில் நடிக்க அழைத்தார். அவர் என்னிடம் முன்பே சொன்னார் சார் வடிவேலு வந்து கூட இருப்பவர்களை நடிக்க விடமாட்டார். ஏனென்றால், அவருடைய குரூப்பில் இருப்பவர்களை மட்டும் தான் நடிக்க வாய்ப்பு கொடுப்பார். ஆனால் என்னுடைய மனதில் நீங்கள் இந்த காட்சியில் நடித்தால் நன்றாக இருக்கும்.
எனவே, நீங்கள் காலையில் ஒரு 4 மணிக்கு விரைவாக எழுந்து வந்துவிடுங்கள் என்று கூறிவிட்டார்.ஏனென்றால் வடிவேலு படப்பிடிப்புக்கு சரியாக 11 மணிக்கு தான் வருவார். எனவே என்னுடைய காட்சிகள் அனைத்தையும் 6 மணிக்குள் எடுத்துவிட்டாச்சு. பிறகு சரியாக ஒரு 11 மணிக்கு வடிவேலு வந்தாரு வந்தவுடனே அவர் ஒருவரை கையோடு கூப்பிட்டும் வந்தார். இதனை பார்த்துவிட்டு சுராஜ் என்னிடம் சொன்னார் நான் சொன்னேல்லன் என்று.
வடிவேலுக்கு என்னை பார்த்தாலே பிடிக்காது அவரால் பல படங்களில் என்னால் நடிக்க முடியாமல் போய் இருக்கிறது. குறிப்பாக தில்லாலங்கடி படத்தில் கூட நான் ஒரு சிறிய ரோலில் நடிக்கவேண்டியது. ஆனால், அவரால் நடிக்க முடியாமல் போனது” என வடிவேலு குறித்து மிகவும் கோபத்துடன் நடிகர் சரவணன் பேசினார். அதனை தொடர்ந்து விவேக் குறித்து பேசிய சரவணன் ” வடிவேலு அந்த மாதிரி ஒரு கேவலமான மனிதர் என்றால் அதற்கு அப்படியே எதிர்மறை விவேக் சார் விவேக் சார் தெய்வம் மாதிரி. அவருடன் படங்களில் நடிக்கும் பிரபலங்களை நடிக்கவிடுவார். எனக்கும் விவேக் சாருக்கும் ரொம்ப தொடர்பெல்லாம் கிடையாது. ஆனால், உதவி இயக்குனர் , லைட்மேன், நடன கலைஞர்கள் என அவர்களுடைய குழந்தைகளுக்கு பீஸ் கட்டி இருக்காரு.
விவேக் சார் பணம் கொடுத்து உதவியதை என்னிடமே பல பிரபலங்கள் கூறிருக்கிறார்கள். இது ஒரு நல்ல குணம் என்றால், மற்றோரு குணம் ரொம்ப ஒழுக்கமான மனிதர். திடிரென்று அவரை எங்கயாவது பார்த்தால் என்ன சரவணன் நல்லா இருக்கீங்களா? என்று கேட்பார். அதுபோல மற்றவர்களிடம் எப்படி பேசவேண்டும் என்பதை நாம் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்” எனவும் சரவணன் தெரிவித்துள்ளார்.