fbpx

பாஜகவில் இணைந்தார் வைகோவின் மருமகன்..!! மதிமுகவின் செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தி..!!

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 21 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர், பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சமீபகாலமாகவே திராவிடக் கட்சிகளை சேர்ந்த பலர், பாஜகவை நோக்கி செல்கின்றனர். அந்த வகையில், வைகோவின் மருமகன் கார்த்திகேயன் கோபாலசாமி, மதிமுகவின் முன்னாள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம் ஆகியோர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்து கொண்டனர். மதிமுகவின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்து புதுக்கோட்டை செல்வம் சமீபத்தில் கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Read More : எப்போதும் மகிழ்ச்சி, ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..? ஜப்பானியர்கள் கடைபிடிக்கும் ரகசியம் இதுதான்..!!

Chella

Next Post

இந்த சானிடைசர்களால் ஆபத்து!… மரணத்தை ஏற்படுத்தும்!… திரும்ப பெறும் நிறுவனம்!

Thu Apr 11 , 2024
Sanitizers: நச்சு மற்றும் மெத்தனால் இருக்கும் ஹேண்ட் சானிடைசர்களை திரும்ப பெறுவதாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), பல்வேறு வகையான சானிட்டைசர்களின் தரம் மற்றும் அதன் லேபிளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. அதில், அருபா அலோ ஹேண்ட் சானிடைசர் மற்றும் அருபா அலோ அல்கோலடா ஜெல் ஆகியவையில் நச்சு மற்றும் மெத்தனால் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அந்த சானிடைசர்களை […]

You May Like