பிரபல சின்னத்துரை நடிகை சந்தியா ஜாகர்லமுடி தான் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது கூட தன்னிடம் சிலர் பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்ள முயற்சி செய்ததாக கண்ணீர் மல்க பேட்டி அளித்திருக்கிறார்.
சன் தொலைக்காட்சியில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெற்றிகரமாக ஒளிபரப்பான மாபெரும் வெற்றி தொடர்தான் வம்சம். இந்த தொடரின் மூலமாக பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து, பிரபலமானவர்தான் சந்தியா ஜாகர்லமுடி. இதனை தொடர்ந்து, சன் தொலைக்காட்சியிலேயே சந்திரலேகா அத்திப்பூக்கள் உள்ளிட்ட, பல்வேறு தொடர்களில் நடித்துள்ள இவர், தற்போது சின்னத்திரையில் இருந்து விலகி தெரு நாய்களை பாதுகாத்து வரும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
இவர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு வழங்கிய பேட்டியில், சின்னத்திரையில் தனக்கு நடந்த மிக கசப்பான அனுபவம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதாவது, கடந்த 2006 ஆம் வருடம் நெடுந்தொடர் ஒன்றின் அறிமுக பாடல் காட்சியை கும்பகோணத்தில் இருக்கின்ற ஆலயத்தில் படமாக்கிய போது, கோவில் யானையுடன் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது, அந்த யானை திடீரென்று என்னை தாக்கியது. ஆனால், அந்த யானை மீது எனக்கு எந்த விதமான கோபமும் இல்லை என்று கூறியுள்ளார்.
அந்த யானை தன்னை தாக்கியதால், என்னுடைய உடம்பில் ஏழு இடங்களில் எலும்பு முறிவு உண்டாகி, சில பாகங்களை முற்றிலும் அகற்றும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த யானை என்னை தாக்கியதும் பயத்தில் நான் மயங்கி விழுந்துவிட்டேன். அதிலிருந்து நான் உயிர் பிழைத்து, வெளியே வந்ததே மிகப்பெரிய விஷயம் என்று கூறியுள்ள அவர், அந்த யானை என்னை தும்பிக்கையால் தான் தாக்கியது. ஆனால், அது என் மீது கால் வைத்து மிதித்தது போல நான் உணர்ந்தேன். அந்த அளவிற்கு வலியால் துடித்துப் போனேன் என்று கூறினார்.
பின்னர் என்னை அந்த யானையிடமிருந்து மீட்டு, அங்கிருந்து சிலர் மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு சென்றார்கள். அவர்கள் அனைவரும் என்னுடன் படப்பிடிப்பில் பங்கேற்ற நடன கலைஞர்கள் தான் என்று கூறிய அவர், உயிர் போகும் அளவுக்கு வலியால் நான் துடித்துக் கொண்டிருந்தபோது கூட, என்னை தூக்கிச் சென்ற நடன கலைஞர்களில் ஒருவர், என்னுடைய மார்பு பகுதியில் கை வைத்து சுகம் கண்டு கொண்டிருந்தார் என்று கூறினார்.
என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற மிகவும் கசப்பான சம்பவம் என்றால், நான் அதைத்தான் சொல்வேன் என்று கூறிய அவர், அந்த சமயத்தில் சற்றேறக்குறைய நான் பிணமாகவே கிடந்தேன். அந்த சமயத்தில் கூடவா இப்படி நடந்து கொள்வார்கள்? என்று கேள்வியை எழுப்பிய அவர் நான் சற்று மயக்க நிலையில் இருந்ததால், அந்த நடனக் கலைஞர் யார்? என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும், அவர் என் மார்பின் மீது கை வைத்து தவறாக நடந்து கொண்டதை நான் நன்றாக உணர்த்தேன். ஆனால், என்னுடைய தாயிடம் கூட இதுவரையில், இந்த விஷயத்தை பற்றி நான் சொன்னதில்லை என்று கண்கலங்கி பேசியிருந்தார் நடிகை சந்தியா ஜாகர்லமுடி.