மணிரத்னம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் பணிகளில் பிசியாக உள்ளார். சோழர்களின் வரலாற்றை பேசும், கல்கி கிருஷ்ண மூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படைக் கொண்டு, பீரீயாடிக்கல் – ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், நிஷல்கல் ரவி, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, மற்றும் மோகன் ராமன் உள்ளிட்ட பல நடிகர்கள் உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார், ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.. இப்படம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில் கடந்த 8-ம் தேதி இப்படத்தின் டீசரை லைகா நிறுவனம் வெளியிட்டது.. இந்த டீசருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது..
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் படலான ‘பொன்னி நதி’ பாடல் இன்று மாலை வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.. அதன்படி இந்த பாடல் வெளியிடப்பட்டது.. இணையத்தில் தவிர, சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் படக்குழு இந்த பாடலை வெளியிட்டனர்.. ஏ.ஆர். ரஹ்மான் குரலில் உருவாகி உள்ள இந்த பாடலில் முழுக்க முழுக்க வந்தியதேவனாக நடித்துள்ள கார்த்தி தொடர்பான காட்சிகளே இடம்பெற்றுள்ளன..
பொன்னியின் செல்வன் கதை, ஆடிப்பெருக்கு நாளை மையமாக கொண்டு புதுவெள்ளம் என்ற அத்தியாயத்தில் வந்தியத்தேவனின் பயணத்துடன் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது..