அஜித் நடிக்கும் துணிவு, விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலை ஒட்டி வெளியாகும் என செய்திகள் வெளியான நிலையில் வாரிசு திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளிவராது என தகவல் கிடைத்துள்ளது.
வாரிசு படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார். திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, சாம், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். வாரிசு படத்தில் ரஞ்சிதமே பாடல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அஜித் குமார் நடிக்கும் துணிவு படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார்.அஜித் குமாரின்நேர் கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து எச்.வினோத் தயாரிப்பாளர் போனி கபூர் இணையும் மூன்றாவது திரைப்படமாக துணிவு அமைந்துள்ளது. துணிவு படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடுகின்றது.
வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது சந்தேகம் என தெலுங்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வாரிசு திரைப்படத்தை பொங்கல் அன்று வெளியிடாமல் ஜனவரி 26 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. வாரிசு திரைப்படத்தின் தமிழக வினியோகம் இன்னும் முடிவாகவில்லை. இதனால் தள்ளிப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.