விஜய் நடிப்பில் பொங்கல் தின ஸ்பெஷலாக வெளியான திரைப்படம் தான் வாரிசு. தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்திற்கு இடையிலும் வசூலில் தூள் கிளப்பியது.வாரிசு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்று அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருக்கிறார்.
திரையரங்கில் ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டு வரும் இந்த வாரிசு திரைப்படம், எப்போது ஓடிடிக்கு வரும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களிடையே மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்து இருக்கிறது.
வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வருகின்ற 22ஆம் தேதி முதல் வாரிசு திரைப்படம் அமேசான் ஓ டி டி தளத்தில் ஒளிபரப்பாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆகவே ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.