சென்ற ஒரு மாத காலமாக ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வந்த வந்த விவகாரங்களில் ஒன்றுதான் பொங்கல் சமயத்தில் வெளியான விஜயின் வாரிசு திரைப்படம் வெற்றி பெறுமா? அல்லது அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் வெற்றி பெறுமா என்பதுதான்.
இந்தத் திரைப்படங்களில் எந்த திரைப்படம் தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை வழங்கியது? எந்தெந்த பகுதிகளில் பதிவை சந்தித்தது? என்பது தொடர்பாக பல தகவல்கள் வெளியாகின.
இந்த சூழ்நிலைகள் தான் வாரிசு மற்றும் துணிவு உள்ளிட்ட 2 திரைப்படங்கள் எவ்வளவு தொகைக்கு விற்பனையானது அதிலிருந்து எவ்வளவு பங்கு கிடைத்திருக்கிறது? என்பது தொடர்பாக தகவல் கிடைத்திருக்கிறது.
அதன் அடிப்படையில், வாரிசு திரைப்படம் 140 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையாகி 147 கோடிக்கு மேல் பங்கு கிடைத்திருக்கிறது தூய்மை திரைப்படம் 85 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு 108 கோடி ரூபாய்க்கு மேல் பங்கு கிடைத்திருக்கிறது.