fbpx

உங்க பர்ஸில் இந்த ஒரு பொருளை மட்டும் வைங்க… ஒருபோதும் பணம் குறையவே குறையாதாம்..

வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பை ஈர்க்க உதவும் வகையில் பல்வேறு கொள்கைகளும் விதிகளும் வாஸ்து சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகள் பற்றியும் வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. அந்த பண வரவை என்ன செய்ய வேண்டும், உங்கள் பர்ஸில் என்ன வைக்க வேண்டும்? வைக்கக்கூடாது என்பது குறித்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் பணம் பெருகவும், செல்வ செழிப்பை அதிகரிக்க உங்கள் பர்ஸில் ஒரு பொருளை வைத்தால் போதும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். உங்கள் பர்ஸில் கிராம்பை வைப்பது தான் அதற்கு சிறந்த தீர்வு.

சமையலறையில் பயன்படுத்துவதைத் தவிர, கிராம்பு வழிபாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கிராம்புகளை பர்ஸில் வைத்திருப்பதால் தேவையற்ற செலவுகள் தவிர்க்கப்பட்டு செல்வம் சேரும் என்பது ஐதீகம். இந்த பரிகாரத்தின் நன்மைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி பார்க்கலாம்.

வாஸ்து சாஸ்திரத்தில், கிராம்பு நேர்மறை ஆற்றல் மற்றும் நிதி செழிப்பை ஈர்க்கும் சக்திவாய்ந்த பொருள் என்று நம்பப்படுகிறது. அதன் நறுமணம் தூய்மை மற்றும் மிகுதியான சூழலை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. நீங்கள் வழக்கமாக கிராம்புகளை வழிபாட்டில் பயன்படுத்தினால், நீங்கள் நிறைய பிரச்சனைகளை தீர்க்க முடியும்.

மேலும் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை பராமரிக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதேபோல், வாஸ்து சாஸ்திரத்தில், கற்பூரத்துடன் கிராம்புகளை எரிப்பதன் மூலம் வீட்டில் இருக்கும் அனைத்து எதிர்மறை ஆற்றல்களிலிருந்தும் விடுபடுவதாக நம்பப்படுகிறது.

கிராம்புகளை பர்ஸில் வைத்திருப்பதால் கிடைக்கும் நன்மைகள் :

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கிராம்பு செழிப்பு மற்றும் பொருளாதார ரீதியான நல்வாழ்வுக்கான காந்தமாக செயல்படும் என்று நம்பப்படுகிறது. எனவே கிராம்பை உங்கள் பர்ஸில் வைத்திருந்தால், பர்ஸில் எப்போதும் பணம் நிறைந்திருக்கும், மேலும் பண இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

உங்கள் பர்ஸில் கிராம்பு வைத்திருப்பது உங்கள் வாழ்க்கையை செல்வம் மற்றும் மிகுதியுடன் ஆசீர்வதிக்கிறது. கிராம்புகளின் நறுமணம் நேர்மறை ஆற்றலின் கேரியராகக் கருதப்படுகிறது, இது உங்களைச் சுற்றியுள்ள சூழலையும் சாதகமாக்குகிறது.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கிராம்பு சுத்திகரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே உங்கள் பர்ஸில் கிராம்புகளை வைத்திருப்பது பணத்துடன் தொடர்புடைய ஆற்றலைச் சுத்தப்படுத்துகிறது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இதனால், உங்கள் பர்ஸில் ஒருபோது பணம் குறையவே குறையாதாம்.

இந்த செயல்முறை தேவையற்ற செலவினங்களிலிருந்தும் உங்களை காப்பாற்றும். வெள்ளிக்கிழமையன்று துர்கா தேவிக்கு மூன்று கிராம்புகளை அர்ச்சனை செய்து, அவற்றை உங்கள் பணப்பையில் வைத்திருந்தால், பல மடங்கு பலன்கள் கிடைக்கும் எனவும் வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

Read More : வீட்டின் பூஜையறையில் இறந்தவர்களின் போட்டோவை வைக்கலாமா..? அப்படி வைத்தால் என்ன ஆகும்?

Rupa

Next Post

என்னது, தலையில் பூ வைத்தால், உடலில் உள்ள நோய் குணமாகுமா?? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.

Thu Dec 5 , 2024
having-flower-on-head-has-numerous-health-benefits

You May Like