fbpx

அழுகிய பிணமாக மீட்கப்பட்ட கட்சி தலைவர்.! சேலத்தில் பரபரப்பு.!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற 40 வயது நபர் ஒரு வழக்கறிஞர். இவர் வாழ்வா சாவா என்ற மாநில கட்சியின் தலைவராக இருந்துள்ளார். 2017 டிசம்பர் ஆத்தூர்  எம்எல்ஏவாக இருந்த சின்ன தம்பியை இவர் அவதூறாக பேசிய வழக்கில் போலீசார் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

இதனை தொடர்ந்து சேலம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சுரேஷ் ஆஜராகாமல் இருந்து வந்ததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. 

கடந்த செப்டம்பர் 17 இல் அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அதன் பின் ஜாமினில் வெளிவந்த அவர் ஆத்தூர் டவுன் போலீஸ் குறித்து வாட்ஸ் அப்பில் ஒரு புகார் தெரிவித்து இருந்தார். 

இத்தகைய சூழலில், அவரது வீட்டில் சுரேஷ் அழுகி பிணமாக தொங்கிக் கொண்டிருந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Baskar

Next Post

பொதுத்துறை பணியாளர்களுக்கு 20% போனஸ்!!! தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை...

Sat Oct 15 , 2022
தமிழக அரசு பொதுத்துறை பணியாளர்களுக்கு அறிவிக்கப்ட்டுள்ள 10% போனசை குறைந்தது 20% ஆக உயர்த்தி வழங்க முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் ரூ.7000 முதல் அதிகபட்சமாக 21,000 வரை ஊதியம் பெறும் ‘சி’ மற்றும் […]

You May Like