fbpx

சாலையில் செல்லும்போது வாகனங்களில் டீசல் காலியானால் அபராதம்!! எந்த நாட்டில் தெரியுமா..?

ஜெர்மனி நெடுஞ்சாலையில் செல்லும்போது வாகனங்களில் டீசல் காலியானால் அபராதம் அல்லது தண்டனை வழங்கப்படுகிறது.

ஜெர்மனி நாட்டை பற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். ஜெர்மனியில் நடைபெற்ற சர்வாதிகாரி ஹிட்லர் ஆட்சி தான் இரண்டாம் உலகப்போருக்கு காரணமாக அமைந்தது. 2-ம் உலகப்போருக்கு பிறகு ஜெர்மனி முழுவதுமே திவாலாகி விட்டது என்றே சொல்லலாம். எனினும் தற்போது உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஜெர்மனியும் இடம்பெற்றுள்ளது. பொறியியல் துறையில் உலகிலேயே சிறந்து விளங்கும் நாடாகவும் ஜெர்மனி திகழ்கிறது. இவை தவிர ஜெர்மனியை பற்றி ஆச்சர்யப்படும் அளவுக்கு பல சுவாரஸ்யமான உண்மைகள் இருக்கின்றன.

ஜெர்மனியில் உள்ள நெடுஞ்சாலைகளில் நீங்கள் அதிவேகமாக காரை ஓட்டி செல்லலாம். ஆனால், செல்லும் வழியில் வாகனங்களில் டீசல் தீர்ந்துவிட்டால், அது ஜெர்மனியில் குற்றச்செயலாகும். அதற்காக நீங்கள் அபராதம் செலுத்த வேண்டும் அல்லது உங்களுக்கு தண்டனை கிடைக்கும். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பிறந்தநாளுக்கு முன்கூட்டியே வாழ்த்து சொல்லும் பழக்கம் உள்ளது.

ஆனால், ஜெர்மனியில் அது துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. எனவே, முன்கூட்டியே வாழ்த்து தெரிவிக்காமல், பிறந்தநாளில் மட்டுமே வாழ்த்து தெரிவிப்பார்கள். பொதுவாக நாம் தொலைபேசியில் யாரையாவது அழைத்தாலோ அல்லது நமக்கு வரும் அழைப்புகளை எடுத்தாலோ முதலில் ‘ஹலோ’ என்று தான் பேசுவோம். ஆனால், ஜெர்மனியில் ஹலோ என்பதற்கு பதிலாக, தங்கள் பெயரை நேரடியாக சொல்லி பேச தொடங்குவார்கள்.

உலகின் முதல் நாளிதழ் ஜெர்மனியில் தான் அச்சிடப்பட்டது. ஆம். கி.,பி 1663ஆம் ஆண்டு உலகின் முதல் நாளிதழ் அங்கு தொடங்கப்பட்டது. அதிக புத்தகங்களை அச்சிடும் நாடுகள் பட்டியலில் ஜெர்மனி இடம்பெற்றுள்ளது. அந்நாட்டில் ஆண்டிற்கு சுமார் 94,000 புத்தங்கள் அச்சிடப்படுகின்றன. உலகிலேயே அதிக உயிரியல் பூங்காக்களை கொண்ட நாடாகவும் ஜெர்மனி உள்ளது. இவை தவிர உலகின் மிகப்பெரிய தேவாலயம் ஜெர்மனியில் தான் உள்ளது. சுமார் 530 உயரம் கொண்ட இந்த தேவாலயம் ‘அல்ம் மின்ஸ்டர்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதில் சுமார் 2,000 பேர் வசதியாக அமர முடியும் அளவுக்கு மிகப்பெரிய தேவாலயம் ஆகும்.

Read more ; கொடைக்கானல், ஊட்டி செல்வோருக்கு மீண்டும் சிக்கல்..!! உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

English Summary

Vehicles that run out of diesel on German highways are fined or punished.

Next Post

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மேலும் ஒருவர் பலி!! - விஷச்சாராய உயிரிழப்பு 65 ஆக உயர்வு!!

Fri Jun 28 , 2024
The death toll has risen to 65 following the death of two more people who were being treated for poisoning in Kallakurichi.

You May Like