உணவே மருந்து என்ற காலம் போய், தற்போது மருந்தே உணவு என்ற நிலை இருவாகியுள்ளது. அந்த மருந்துகளும், நோயை குணப்படுதுகிறதோ இல்லையோ, ஆனால் ஏராளமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனால் நாம் முன்னோர்கள் வாழ்ந்த ஆரோக்கியமா உணவு மற்றும் வாழ்க்கை முறையை நாம் பின்பற்றினால் தான் நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும்.
இதனால் முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது உணவு மற்றும் வாழ்க்கை முறையை சீர்படுத்துவது தான். தேவையில்லாத நேரங்களில் தேவையில்லாத உணவுகளை சாப்பிடுவதால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆம், இதனால் நாம் தினமும் சாப்பாட்டு முறையில் ஒரு சில மாற்றங்கள் செய்வதால், நமது உடலில் ஏற்படும் 30% நோயை தவிர்க்க முடியும் என்று செஃப் வெங்கடேஷ் பட் கூறியுள்ளார்.
அதில் அவர் கூறும் போது, இரவு 7 முதல் 8 க்குள், நாம் இரவு உணவை சாப்பிட்டு முடிக்க வேண்டும். 8 மணிக்கு மேல் சாப்பிடாமல், வயிறை காலியாக வைத்திருக்க வேண்டும்.
காலை எழுந்ததும், இரவு தூங்குவதற்கு முன்பும் 300 மி.லி சுடுதண்ணீர் குடிக்க வேண்டும். பெரும்பாலும், நமது உணவில் எண்ணெயின் அளவை குறைத்து விட வேண்டும்.
மேலும், எண்ணெய்யில் பொறித்த உணவுகள் மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளை கட்டாயம் சாப்பிடக் கூடாது. நாம் காலையில் சற்று அதிகமாக சாப்பிட்டாலும், இரவு நேரம் கட்டாயம் அதிக உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். என்ன தான் உங்களுக்கு பிடித்த உணவாக இருந்தாலும் கூட, சாப்பாட்டின் அளவை நாம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
Read more: ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிட வேண்டும்..? மஞ்சள் கரு சாப்பிடக் கூடாதா.