ஜனவரி 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து முடிவடைந்த நிலையில், தற்போது பனிக்காலம் தொடங்கியுள்ளது. அதிலும், குறிப்பாக வடமாநிலங்களான டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால், அதிக சாலை நிகழ்கின்றன. அந்த வகையில், டெல்லியில் அதிகாலைப் பொழுதில் ஆட்களை மறைக்கும் அளவுக்கு கடும் பனிப்பொழிவும், அதிக குளிரும் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் அதிகாலையில் எழுந்து பள்ளிக்கு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

பொதுவாக டெல்லியில், இதுபோன்ற காலக்கட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை டெல்லி கல்வி இயக்குனரகம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜனவரி 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.