fbpx

தமிழகத்தில் இன்று மிக கனமழையும், கனமழையும் பெய்யும்..!! எந்தெந்த மாவட்டங்களில் எப்படி இருக்கும்..?

தமிழகத்தில் இன்று (அக். 16) பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று மிக கனமழையும், கனமழையும் பெய்யும்..!! எந்தெந்த மாவட்டங்களில் எப்படி இருக்கும்..?

அக். 16ஆம் தேதி (இன்று) நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று மிக கனமழையும், கனமழையும் பெய்யும்..!! எந்தெந்த மாவட்டங்களில் எப்படி இருக்கும்..?

அக். 17ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை,புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் இன்று மிக கனமழையும், கனமழையும் பெய்யும்..!! எந்தெந்த மாவட்டங்களில் எப்படி இருக்கும்..?

அக். 18, 19ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகுதிகள், தென் தமிழககடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’இந்த அணியை மட்டும் சாதாரணமா நினைக்காதீங்க’..!! இந்திய அணியை எச்சரிக்கும் கம்பீர்..!!

Sun Oct 16 , 2022
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் கோப்பையை ஜெயித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற போகும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேசமயம், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சந்திக்கப் போகும் சவால்கள் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், […]
’இந்த அணியை மட்டும் சாதாரணமா நினைக்காதீங்க’..!! இந்திய அணியை எச்சரிக்கும் கம்பீர்..!!

You May Like